Actor Maththew Perry : மறைந்தார் நடிகர் மேத்யூ பெர்ரி...சோகத்தில் சாண்ட்லர் ரசிகர்கள்..!
இந்தியாவில் எக்கச்சக்க வரவேற்பை பெற்ற ஆங்கில தொடர் என்றால் ஃப்ரெண்ட்ஸ் என்றே சொல்லலாம். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இத்தொடருக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇத்தொடரில் சாண்ட்லர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் மேத்யூ பெர்ரி.
இவர் தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தார்.
இவ்வாறு ரசிகர்களை மிகவும் கவர்ந்த மேத்யூ பெர்ரி உயிரிழந்துவிட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு வயது 54. மேத்யூ பெர்ரி, தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் பேச்சு மூச்சின்றி, அவர் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் ஆனால், அது எதுவுமே பலன் அளிக்கவல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த செய்தியை அறிந்த ஃப்ரெண்ட்ஸ் சீரீஸ் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -