Actor Karthi : அறிந்ததும் அறியாததும்.. நடிகர் கார்த்தியின் மறுபக்கம் இதுதான்!
பருத்திவீரனில் அறிமுகமாகி வந்தியத்தேவனாக பலரின் மனதை கொள்ளை கொண்டவர் கார்த்தி. இப்போது ஜப்பான் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
தனக்கு செட்டாகும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் கார்த்திக்கு இயக்குநராக ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாம். விதியின் விளையாட்டால் படங்களை இயக்குவதற்கு பதிலாக கதாநாயகனாக நடித்து வருகிறார்.
மணிரத்னத்தின் ஆய்த எழுத்து படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்த கார்த்தி, அதன் ஹிந்தி ரீமேக்கான ‘யுவா’படத்திலும் மணியுடன் பணியாற்றியுள்ளார்.
கமல் ஹாசனின் நடிப்பில் வெளிவந்த படங்களை பார்த்து வளர்ந்ததால், இன்று வரை கமலின் பெரிய ரசிகராக இருந்து வருகிறார் கார்த்தி.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான மகேஷ் பாபுவும் கார்த்தியும் ஒரே கல்லூரியில் படித்தனர்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் க்ராபிக் டிசைனராக பணிபுரிந்துள்ளார்.