HBD Jai : சுப்பிரமணியபுரம் நடிகர் ஜெய்க்கு இன்று பிறந்தநாள்!
சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தவர் நடிகர் ஜெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2002ம் ஆண்டு வெளியான 'பகவதி' திரைப்படத்தில் நடிகர் விஜய் தம்பியாக சினிமாவில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 16 .
2007ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் மூலம் நடிகராக நல்ல வரவேற்பை பெற்றார்.
சசிகுமார் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்த சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் ஹீரோ அந்தஸ்தை பெற்றார்.
இசை மீதும் ஆர்வம் கொண்ட ஜெய் லண்டன் டிரினிட்டி கல்லூரியில் கீபோர்டில் ஐந்தாம் நிலை வரை படித்துள்ளார். படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது.
கோவா, வாமனன், எங்கேயும் எப்போதும், வடகறி, திருமணம் என்னும் நிக்காஹ் , ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் மிக பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன.
பல மல்டி ஸ்டாரர் படங்களில் நடித்துள்ளார்.
இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -