Dhanush 50 : தனுஷின் அண்ணனாக களமிறங்கும் எஸ்.ஜே சூர்யா- படத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள் இதோ !
கோலிவுட், பாலிவுட் என அனைத்து சினிமா ரசிகர்களையும் தன் நடிப்பால் ஈர்த்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்துள்ளவர் நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் தற்போது தன் 49ஆவது படமான கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்
முன்னதாக, தனுஷின் 50ஆவது படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், இப்படத்தை தனுஷே இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இப்படத்தில் துஷா துஷாரா விஜயன் - காளிதாஸ் இருவரும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.ரா விஜயன் - காளிதாஸ் இருவரும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது
நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் இருவரும் இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் வட சென்னையை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகவும், விஷ்ணு விஷால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படம் தயாராவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.