Sarpatta Parambarai 2 : 'நீ இறங்கி ஆடு கபிலா' சார்பட்டா இரண்டாம் பாகத்திற்கு வெறித்தனமாக தயாராகும் நடிகர் ஆர்யா!
சுபா துரை | 30 Jan 2024 08:00 PM (IST)
1
கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் “சார்பட்டா பரம்பரை”.
2
இந்த படத்தில் ஆர்யா, துஷ்ரா விஜயன், பசுபதி, ஜான் கொக்கைன், ஜான் விஜய்கலையரசன், ஷபீர் கல்லறக்கல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் சார்பட்டா பரம்பரைக்கு இசையமைத்திருந்தார்.
3
அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் கவர்ந்தது.
4
இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் சார்பட்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது.
5
மேலும் தற்போது பாக்ஸிங் பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து #சார்பட்டா2 என்று பதிவிட்டுள்ளார்.
6
இதனை பார்த்த சினிமா ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.