Aishwarya Arjun Marriage : நடிகர் அர்ஜுன் மகளுக்கு இந்த மாதமே நிச்சயதார்த்தம்..திருமணம் எப்போது..?
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக கலைஞராக விளங்குபவர் நடிகர் அர்ஜுன். பெரும்பாலன அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து வந்ததால் அவர் ஆக்ஷன் கிங் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகிறார்.
அர்ஜுன் மூத்த மகள் ஐஸ்வர்யா 2013ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான 'பட்டத்து யானை திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்தியிலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ஒரு சில படங்களில் நடித்து வந்தார். தற்போது அவரது தந்தை இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2021ம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சர்வைவர்' என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்கினார் நடிகர் அர்ஜுன். அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி.
அந்த சமயத்தில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்பு காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சை கொடி காட்டவே அவர்களின் நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெற உள்ளது.
ஐஸ்வர்யா - உமாபதி காதல் விவகாரம் இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்போது அவர்களின் நிச்சயதார்த்த அறிவிப்பும் இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஐஸ்வர்யா - உமாபதி திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் அர்ஜுன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்களுக்கு மத்தியில் மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தத்தை இந்த மாதமே நடத்த உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.