Actor arjun news temple opening pics : அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் - புது புகைப்படங்கள்!
நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அனுமன் ஆலயம் ஒன்றை கட்ட வேண்டும் என்பது நடிகர் அர்ஜுனின் நீண்டநாள் கனவு.
இதற்காக அவர் தனக்கு சொந்தமான போரூர் கெருகம்பாக்கத்தில் உள்ள தோட்டத்தில் கோயில் கட்டும் பணியினைத் தொடங்கினார்.
ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் காட்சி கொடுக்கிறார். ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்தத் திருமேனி 28 அடி உயரமும் 17 அடி அகலமும் கொண்டது.
கர்நாடக மாநிலம் கொய்ரா கிராமத்தில் செய்யப்பட்ட இந்தத் திருமேனி சுமார் 200 டன் எடை கொண்டது.
அங்கிருந்து பெரிய டிரக்கில் ஏற்றப்பட்டுச் சென்னை கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகப் பெரிய விழாவாக நடைபெற வேண்டிய இந்த கும்பாபிஷேகம் மிகவும் எளிமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி நடைபெற்ற விசேஷ பூஜைகளில் வெகு சிலரே கலந்துகொண்டனர்.