Arjun Das : லியோ படம் எல்.சி.யூ வில் இருக்கா இல்லையா? வைரல் கேள்விக்கு சுவாரஸ்ய பதில் கொடுத்த அர்ஜுன் தாஸ்!
நடிகர் அர்ஜூன் தாஸ் பெருமான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதைதொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான த்ரில்லர் படமான அந்தகாரம் படமும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து கவனமீர்த்து வருகிறார்.
அதேபோல் கைதி, மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்தும், தன் கணீர் குரலாலும் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் அர்ஜூன் தாஸ்.
தற்போது இயக்குநர் வசந்த பாலன் இயக்கும் அநீதி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு நிறுபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அர்ஜூன் தாஸ்,‘லியோ படம் எல்.சி.யூ வில் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள அக்டோபர் 19 வரை காத்திருக்க வேண்டும்’என கூறினார்.
அதுமட்டுமல்லாமல் ‘லியோ படத்தின் கதை விளக்கத்தின் போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இருந்தேன் லியோ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் எனக்கு நன்கு தெரியும்’ என்றார்.
‘நான் இப்படத்தில் இருக்கிறேனா என்ற கேள்விக்கு பதில் கிடைக்க நீங்கள் அக்டோபர் அக்டோபர் 19 வரை காத்திருக்க வேண்டும்’ என்று பேசினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -