Jailer 2nd Single : ‘டைகர் கா ஹுக்கும்..’ அடுத்த அதிரடிக்கு ரெடியா இருங்க மக்களே!

ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர்
ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கடந்த ஜூலை 6 ஆம் தேதி ஜெயிலர் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘காவாலா’ பாடல் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டானது.
அதைதொடர்ந்து நேற்று ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்தான அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டது
இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஹூக்கும்’ எனும் இரண்டாவது பாடல் வரும் ஜூலை 17 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் வெளியானதில் இருந்து ரஜினியின் ரசிகர்கள் இணையத்தில் இதை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.