Aneethi Review : முதலாளிகளுக்கு ஒரு நீதி.. எளிய மக்களுக்கு ஒரு நீதி..அநீதி படத்தின் குட்டி விமர்சனம் இங்கே!
வெயில், அங்காடித்தெரு என எளிய மனிதர்களின் கதைகளை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் வசந்தபாலன் மீண்டும் ஒரு எளிய மனிதரின் கதையை கையில் எடுத்துள்ளார்.
சாக்லேட்டை கண்டாலே கடுப்பாகும் அர்ஜூன் தாஸ் ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். உணவு டெலிவரி பாயாக வரும் அவருக்கு துஷாரா விஜயனுடன் காதல் உண்டாகிறது.
எதிர்பாராதவிதமாக இருவரும் ஒரு குற்ற வழக்கில் சிக்கிக் கொள்கின்றனர். அதன்பின் இருவரின் வாழ்க்கையை என்னாகிறது? எளிமையான மனிதர்களுக்கு சட்டம் சமமாக இருந்ததா? இல்லை அநீதி இழைக்கப்பட்டதா? என்பதுதான் திரைக்கதை.
அர்ஜூன் தாஸ் எப்படி ஹீரோ கேரக்டருக்கு செட் ஆவார் என நினைத்தவர்களுக்கு, நடிப்பின் மூலமே பதில் சொல்லியிருக்கிறார் சிங்க குரலரசன்.
துஷார விஜயன் வழக்கம் போல் தனது துரிதமான நடிப்பின் மூலம் தனக்கு கொடுத்த கேரக்டரை சிறப்பாக கையாண்டுள்ளார். குறிப்பாக முதலாளியிடம் அடிமையான வாழ்க்கை வாழ்வது, அவர்களை நினைத்து பயப்படுவது என மிளிர்கிறார்.
மொத்தத்தில் எளிய மக்களுக்கான நீதியை கேட்கும் இந்த ‘அநீதி’ படத்தில், காட்சிகளின் வழியே அதன் அழுத்தத்தை இன்னும் அதிகப்படுத்தியிருந்தால் பாராட்டைப் பெற்றிருக்கும்.