Vijayakanth : 71ஆவது பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காட்சி அளித்த கேப்டன்..மகிழ்ச்சி கடலில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் எளிமையாக தன் பயணத்தைத் தொடங்கி, இன்று சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் விருட்சமாக வளர்ந்து நிற்பவர் விஜயகாந்த். சினிமா, அரசியல் என முத்திரை பதித்து தவிர்க்க முடியாத நபராகத் திகழும் விஜயகாந்த் இன்று தன் 71ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடந்த சில நாள்களுக்கு முன் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், அவரது மனைவியும், தேமுதிக கட்சி பொருளாளருமான பிரேமலதா உள்ளிட்ட தேமுதிகவினர் இத்தகவலை மறுத்தனர்.
இந்நிலையில், தன்னுடைய உடல்நலன் பற்றி யாரும் நம்ப வேண்டாமெனவும், தான் நலமுடன் இருப்பதாகவும், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களை நேரில் தன் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்திப்பதாவும் விஜயகாந்த் நேற்று அறிக்கை பகிர்ந்து தெரிவித்திருந்தார். மேலும் தொண்டர்கள் யாரும் தன்னைப் பார்க்க வரும்போது சால்வை, மாலை உள்ளிட்ட அன்பளிப்புகளை தவிர்க்குமாறும் விஜயகாந்த் தன் அறிக்கையில் கோரியிருந்தார்.
இந்நிலையில் தன் பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ரசிகர்களை விஜயகாந்த் இன்று தன் கட்சி அலுவலகத்தில் சந்தித்து வருகிறார்.
சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்து வரும் நிலையில், இன்று காலை முதலே அங்கு ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் கூடத் தொடங்கினர்.
அதன்படி தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் எல்.இ.டி திரை வைத்து , கலை நிகழ்ச்சிகளுக்கும் நடைபெற்று வரும் நிலையில், விஜயகாந்த் பட பாடல் வரிகளுக்கு ஏற்ப தொண்டர்கள் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தன் ரசிகர்களை விஜயகாந்த் சந்தித்து வருகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -