OMG 2 Teaser: கடவுள் அவதாரம் எடுக்கும் நடிகர் அக்ஷய்குமார் ..11 ஆண்டுகள் கழித்து வெளியான இரண்டாம் பாகத்தின் டீசர்!
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள ’ஓ மை காட்’ இரண்டாம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு உமேஷ் சுக்லா எழுதி இயக்கிய படம் ‘ஓ மை காட்’.
இதன் முதல் பாகத்தில் மிதுன் சக்ரவர்த்தி , அக்ஷய் குமார், பரேஷ் ராவல், ஓம் புரி , கோவிந்த் நாம்தேவ் , பூனம் ஜாவர், பூஜா குப்தா மற்றும் மகேஷ் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
அந்த காலக்கட்டத்தில் கடும் சர்ச்சைகளை கிளப்பிய இப்படத்தின் 2 ஆம் பாகம் 11 ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ளது.
இதில் சிவபெருமானின் அவதாரமாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். முதல் பாகத்தில் பரேஷ் ராவல் ஒரு நாத்திகராக சித்தரிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் பாகத்தில் கடவுள் நம்பிக்கை கொண்டவராக காட்டப்பட்டுள்ளது.
தற்போது இதன் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.