வினோத் கூட வொர்க் பண்ண ரொம்ப பிடிச்சிருக்கு - வலிமை அப்டேட் போட்டோஸ்
வலிமை படத்தின் கதையை அஜித்திடன் சொல்லும் பொழுது ஒன் லைன் மட்டும்தான் கேட்டாராம், பின்னர் ‘எப்போ பார்த்தாலும் யோசிச்சுக்கிட்டே இருக்குற நாம, யோசிக்கவே டைம் இல்லாம ஓடிட்டு இருக்குற மக்களுக்குப் படம் பண்றோம். அதை மைண்ட்ல வெச்சு பண்ணுங்க’ சார் என இயக்குநரிடம் கூறினாராம் அஜித்
வலிமை படம் முழுக்க முழுக்க அஜித்திற்கான படம் என்பதில் சந்தேகமே இல்லை என்றாலும் இயக்குநரின் டச்சும் இருக்கும் என ஹச்.வினோத் தெரிவித்துள்ளார். படம் அஜித் ரசிகர்களுக்காக மட்டுமல்லாமல் குடும்ப ரசிகர்களுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளதாம்
படத்தில் வில்லனாக நடிக்க அர்ஜுன் தாஸ் மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும் கதைக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்றாராம் அஜித். ஆனால் சில காரணங்களால் அவர்களை தவிர்த்து மலையாள நடிகர் டொவினோ தாமஸை அனுகியுள்ளனர்.
ஷூட்டிங்கின் பொழுது வில்லன் கார்த்திகேயா முகத்தில் தெலுங்கு சாயல் தெரிகிறது அவரை மாற்றிவிடலாமா என அஜித்திடம் கேட்டுள்ளார் இயக்குநர், உடனே அஜித் அதை மட்டும் செய்யாதீர்கள். என் வாழ்க்கையில் இப்படி ஒரு படத்திலிருந்து பாதியிலேயே நீக்கப்பட்டேன். அதன் பிறகு எங்கு சென்றாலும் அதற்கான காரணங்கள் மட்டுமே கேட்கப்பட்டது. அது நம் கெரியரையே மாற்றிவிடும்
இதையெல்லாம் விட கூடுதல் சுவாரஸ்யம் இயக்குநர் ஹச்.வினோத்தான் அஜித்தின் 61 வது படத்தை இயக்கவுள்ளாராம். அதற்கான கதை விவாத பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறதாம்
தொடர்ந்து மூன்றாவது படம் ஒரே இயக்குநருடன் பயணித்தால் மக்களுக்கு அலுத்துவிடாதா என கேட்டாராம் வில்லன் கார்த்திகேயா. அதற்கு அஜித் “எனக்கு வினோத் கூட வொர்க் பண்ண ரொம்ப பிடிச்சிருக்கு, அதனால பண்ணுறேன் !” என்றாராம்
வினோத், அஜித் ஹாட்ரிக் கூட்டணியின் அடுத்த பட அப்டேட்டிற்கு தயாராகுங்கள் தல ஃபேன்ஸ்