5 years of 96 : ‘உன்ன எங்க விட்டேனோ, அங்கேயே தான் ஜானு இன்னும் இருக்கேன்..’ 5 ஆண்டுகளை கடந்த 96!
முதல் காதல் எப்போதும் நம் மனதில் தனி இடத்தை பிடித்திருக்கும். அதுவும் பள்ளி பருவ காதலுக்கு தனி சிறப்பு உண்டு. அப்போது வெளியான பாடல்களை இப்போது கேட்டாலும், அந்த நினைவுகள் நம் கண் முன் வந்துச் செல்லும். அப்படியாக, மாசில்லா மனதுடன் காதலித்த பழைய நினைவுகளை கொண்டு வந்த படமே 96.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒளிப்பதிவாளராக இருந்து சி.பிரேம் குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 96 படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ்,ஆதித்யா பாஸ்கர், வர்ஷா பொல்லம்மா, கௌரி கிஷன், ஜனகராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இசையமைத்த நிலையில் படத்தின் அனைத்து பாடல்களையும் கார்த்திக் நேத்தா எழுதியிருந்தார்.
ஒரு பள்ளியில் 1996 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் மீண்டும் ஒன்றுக் கூடி ரீ-யூனியன் நடத்த முடிவு செய்கிறார்கள். அவர்களின் செட்டில், ஸ்பெஷலாக இருக்கும் ராமச்சந்திரன், ஜானகியும் அங்கு வருகிறார்கள். முன்னொரு காலத்தில் காதலித்த இருவரின் தற்போதைய வாழ்க்கை எப்படி இருக்கிறது, இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்பதை இரு வேறு காலத்தை முன்னும் பின்னும் காட்டுவதே படக்கதை.
பொக்கிஷமான நினைவுகளை கண் முன் கொண்டு வரும்‘காதலே காதலே’, சிங்கிளாக வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு ‘லைஃப் ஆப் ராம்’, சோக கடலில் ஆழ்த்த ‘தாபங்களே’, உணர்வுகளை வெளிக்கொணரும் ‘அந்தாதி’ என சூப்பர் டூப்பர் ப்ளே லிஸ்டை கொண்ட இப்படம் ரிலீஸிற்கு முன்பே செம ஹிட்டாகியது.
image 5இப்படம் இளைஞர்களின் கனவில் கால் ஷீட் கொடுத்து வந்த சந்தியா, மலர், தனலட்சுமி, ஜெஸ்ஸி, ஹெமானிகா வரிசையில் ஜானுவும் இணைந்தார்.
வாழ்க்கையில் அடுத்தடுத்து வரும் நிகழ்வுகளுடன் நாமும் சேர்ந்து நகர வேண்டும் என்பதை உணர்த்திய 96 வெளியாகி இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவாகிவிட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -