Tamil Movies : 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் சுயம்வரம், சங்கமம்!
1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சுயம்வரம். இப்படத்தை சுந்தர், அர்ஜுன், லியாகத் அலி கான், பி வாசு, கே எஸ் ரவிக்குமார் மற்றும் செல்வா ஆகிய ஆறு இயக்குனர்கள் இயக்கி இருந்தனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிஜயகுமார் தனது 9 பிள்ளைகளுக்கு ஒரு நேரத்தில் கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறார். 9 பிள்ளைகளும் காதலித்தவரை எப்படி வீட்டின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர் என்பதே படத்தின் கதை.
இது, ஒரு நாளில் எடுக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்தது. இந்த படத்திற்கு மூன்று இசையமைப்பாளர், 17 ஒளிப்பதிவாளர் சேர்ந்து பணியாற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது
1999 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரகுமான் நடித்து இருந்த படம் சங்கமம். இப்படத்தில் வித்யா, விஜய குமார், மணிவண்னன், ராதா ரவி, வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது
ஹீரோ நாட்டுப்புற கலைஞராக இருக்கிறார், ஹீரோயின் பாரத நாட்டிய கலைஞராக இருக்கிறார்.இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்கள் இருவரின் அப்பாக்களுக்கு நடுவில் எந்த கலை பெரியது என மோதல் வருகிறது. அந்த மோதலில் யார் வெற்றி பெறுகிறார்? ஹீரோ, ஹீரோயின் சேர்ந்தார்களா? என்பதே படத்தின் கதை.
இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இரண்டு கலைக்கு நடுவில் ஏற்படும் மோதலை இசை மூலம் வேறு படுத்தி காட்டி இருப்பார் ரஹ்மான் . சங்கமம் படத்தின் மூலம் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -