21 Years of Panchathanthiram: பார்க்க பார்க்க சலிக்காத பஞ்சத்தந்திரம் திரைப்படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவு!
2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம். கே.எஸ் ரவிகுமார் இயக்கி, க்ரேஸி மோகன் வசனங்கள் எழுதி கமல்ஹாசன் திரைக்கதை எழுதி உருவான திரைப்படம் பஞ்சதந்திரம். கமல்ஹாசன் , ஜெயராம் , யூகி சேது , ஸ்ரீமன் இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஐந்து ஆண்கள் திருமணத்திற்கு பின்பான தங்களது வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்கிற ஒற்றை வரியை கதைக்களமாக எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட படம் பஞ்சதந்திரம். இந்த ஐந்து நபர்களும் தங்களது வீட்டிற்குத் தெரியாமல் போகும் ஒரு பயணத்தில் நடக்கும் சம்பவங்களை மிகவும் காமிக்கலான நகைச்சுவைகளால் நிரப்பியிருப்பார்கள்.
கே எஸ் ரவிகுமார் மற்றும் கமல் ஆகிய இருவரும் மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்தார்கள். அதே சமயத்தில் ரவிகுமாரில் மேலாளரான பி.எல். தேனப்பன் அவர்கள் தயாரிப்பில் உருவான முதல் படம் பஞ்சதந்திரம்.
பெரும் பாலான நகைச்சுவைத் திரைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சலிப்படைந்து விடுகின்றன. அப்படியான ஒரு சூழலில் இன்று வரை எத்தனை முறை பார்த்திருந்தாலும் ரசிகர்களை சிரிக்க வைக்கக்கூடிய ஒரு படமாக இருக்கிறது பஞ்சதந்திரம்.
பஞ்சதந்திரம் திரைப்படத்தின் காமெடி ஆங்கிலத்தில் பன் (pun) என்று சொல்லப்படும் ஒரு வகையான நகைச்சுவைத் தன்மையை கையாண்டது. க்ரேஸி மோகனின் அனைத்து வசனங்களுமே பன் வகைமையைச் சார்ந்தவை.
பஞ்சதந்திரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தாராம் கமல்ஹாசன். திருமணமான ஐந்து பெண்கள் அதே மாதிரி ஒரு பயணத்திற்கு செல்லும் கதையாம். ஆனால் கமல் பிஸியாக இருந்த காரணத்தினால் அந்தப் படம் கைவிடப்பட்டது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -