Sivaji The Boss : 17 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினியின் சிவாஜி தி பாஸ்!
ஏ வி எம் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் முதல் முதலில் இணைந்த படம் சிவாஜி தி பாஸ். படத்தில் ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன், ரகுவரன், சுமன் ஆகியோர் நடித்து இருந்தனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரஜினிகாந்தின் சேவை மனப்பான்மை சுமனின் பிசினஸை பாதிக்கும் வகையில் அமைவதால் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் மோதல் ஏற்படுகிறது. வில்லனை பழிவாங்க அவனிடம் இருக்கும் மொத்த கருப்பு பணத்தையும் ரஜினி எப்படி வெளியே கொண்டு வருகிறார்? அதற்கு இடையில் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதே படக்கதை.
“கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும்.. சிங்கம் சிங்களத்தான் வரும்”, “எம் ஜி ஆரும் நான்தான் சிவாஜியும் நான்தான்”, “பேர கேட்டாலே சும்மா அதிருதுல...” போன்ற வசனங்கள் மாஸாக இருக்கும்.
50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், 125 கோடி ரூபாயை வசூல் செய்தது. அது மட்டுமல்லாமல் சிறந்த ஸ்பெஷல் எபக்ட்ஸ் பிரிவில் தேசிய விருதையும் பெற்றது சிவாஜி படம்.
ஷங்கரின் இயக்கம், ரஹ்மானின் இசை, கே வி ஆனந்தின் ஒளிப்பதிவு என அனைத்திலும் பிரமாண்டம் கொண்ட சிவாஜி தி பாஸ் படம் வெளியாகி 17 அண்டுகள் நிறைவாகியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -