17 years of Pudhupettai : 'போர் களத்தில் பிறந்து விட்டோம்..'செல்வராகவனின் மாஸ்டர்பீஸ் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு!
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சினேகா, சோனம் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான படம் புதுப்பேட்டை.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்களே!
மேலும் யுவனின் இசைக்கு நிகராக நா.முத்துக்குமாரின் வரிகளும் பெருமளவில் பேசப்பட்டது
இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதைக்களத்துடன் உருவான புதுப்பேட்டை, ஆரம்பத்தில் அவ்வளவாக பேசப்படவில்லை. 2016 ஆண்டு புதுப்பேட்டை படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட போது, ரசிகர்கள் புதுப்பேட்டையை கொண்டாடினார்கள்.
முரட்டு தேகத்துடன்முரட்டு தேகத்துடன் இருக்கும் ஹீரோ, கற்புக்கரசிகளான பெண்கள் என்ற பொதுவான பிம்பத்தை உடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மாஸ்டர்பீஸ்தான் புதுப்பேட்டை. இருக்கும் ஹீரோ, கற்புக்கரசிகளான பெண்கள் என்று அந்த பொதுவான சினிமா வட்டத்தில் இருந்து வெளியே நின்று உருவாக்கப்பட்ட மாஸ்டர்பீஸ் தான் புதுப்பேட்டை.
மேலும், பல இயக்குநர்களுக்கு புதுப்பேட்டை போன்ற படம் எடுக்க வேண்டும் என்பது கனவாகவே உள்ளது.