Sivaji The Boss: பிரமாண்டத்திற்கு இலக்கணமாய் திகழும் ஷங்கரின் சிவாஜி தி பாஸ் 16 வருடங்களை கடந்தது!
இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த படம் சிவாஜி தி பாஸ். ஸ்டைலுக்கு பேர் போன ரஜினிகாந்தை வைத்து பிரமாண்டத்திற்கு பேர் போன ஷங்கர் இந்த படத்தை இயக்கினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஸ்டைல், காமெடி, ஆடல், பாடல், காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன், சமூக கருத்து என கமர்ஷியல் படத்திற்கு தேவையான அத்தனை அம்சமும் இப்படத்தில் இருந்தது.
ஸ்ரேயா, விவேக், வடிவுக்கரசி, போஸ் வெங்கட், சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா, ரகுவரன், உமா பத்மநாபன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு இயக்குநர் பல கோடிகள் செலவு செய்து பாடல் காட்சிகளை எடுத்தார். அந்த பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியேங்கும் ஒளித்தது.
இந்த படம் சுமார் 60-80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 150 கோடி ரூபாய் வசூலை குவித்தது. சில வருடங்களுக்கு முன்பு 3டி தொழில் நுட்பத்தில் ரீ-ரிலீஸானது இப்படம்.
தற்போது இந்த படம் வெளியாகி இன்றுடன் 16 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -