15 years of Dasavatharam : தெரிந்த படம் தெரியாத தகவல்கள்.. கமலின் தசாவதாரம் உருவான கதை!
கமல்ஹாசனின் கைவண்ணத்தில் உருவான தசாவதாரத்தின் கதையை படமாக்க பல இயக்குநர்கள் மறுத்தனர். பின்னர், கே.எஸ்.ரவிக்குமாரை தொலைப்பேசியின் வாயிலாக அனுகினார் கமல். எல்டாம்ஸ் ரோட்டிலிருந்து வந்த கமலின் அழைப்புக்கு குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர் சம்மதம் அளித்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎப்போதும் மூத்த கலைஞர்களிடம் ஆலோசனை கேட்கும் கமல், முக்தா ஸ்ரீனிவாசனிடம் கலாந்தாய்வு செய்தார். அதன் பின் சுஜாதா, மதன், ரமேஷ் அரவிந்த், க்ரேஸி மோகன் ஆகியோரிடம் கதையை ஒப்பித்து காண்பித்து, அவர்களுக்கு எழுந்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதிலளித்தார் கமல்.
ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கான தோற்றத்தை சோதனை செய்து பார்க்க அமெரிக்காவுக்கு 21 நாள் பயணத்தை கமலும், ரவிக்குமாரும் மேற்கொண்டனர். அமெரிக்காவை சேர்ந்த ஒப்பனை கலைஞர் மைக்கெல் வெஸ்ட்மோர், ஒன்றின் மேல் ஒன்றாக மேக்-அப் செய்தாராம். ஒவ்வொரு லுக்கையும் படம்பிடிக்க, ஒருநாளுக்கு 250 அமெரிக்க டாலரை கொடுத்து புகைப்பட கலைஞர் ஒருவரை பணி அமர்த்தினர்.
10 லுக்குகளையும் பார்த்து ஆர்வமடைந்த படத்தின் தயாரிப்பாளர், இதை அனைத்தையும் வெளியிட திட்டமிட்டார். அது வெளியானால் மக்களின் ஆர்வம் குறைந்துவிடும் என்று சமாளித்தார் கமல். இறுதியில் வரும் சுனாமி க்ளைமாக்ஸ் காட்சியின் கிராபிக்ஸை உருவாக்க 1 கோடி ரூபாய் தேவைப்பட்டது. பட்ஜெட் சிக்கல் ஏற்பட்டதால், ரயில் காட்சியோடு முடியும் க்ளைமாஸை எழுதினார் கமல். பெருமாள் சிலையில் இருக்கும் ரங்கராஜன் நம்பியை காண்பிக்க சுனாமி காட்சிதான் சரிப்பட்டு வரும் என்பதை தன் கருத்தில் கொண்டு, போராடி தசாவதாரத்தை இயக்கி முடித்தனர்.
கெளதமி, சமீர் சந்திரா, தோட்டா தரணி, பிரபாகர், ஜீவா போன்ற தொழில்நுட்ப கலைஞர்களும் கமலுடன் தோல் கொடுத்து நின்று அவரின் கனவை நினைவாக்க உதவினர்.
தயாரிப்பாளர் ஹிமேஷ் ரேஷம்மியாவை பரிந்துரை செய்தார். தசாவதாரத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டானது என்பது மீத கதை. தேவி ஸ்ரீ பிரசாத்தின் துள்ளலான பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்தது.
தசாவதாரம் படத்தின் கதாபாத்திரங்கள் : கடலில் மாய்ந்த விஷ்ணு தாசன் ரங்கராஜன் ராமனுஜ நம்பி (மச்ச அவதாரம்), அமெரிக்க நாட்டின் 43வது ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் (கூர்ம அவதாரம்), இறந்த மகனை நினைத்து வாழும் கிருஷ்ணவேனி பாட்டி (வராக அவதாரம்), தங்கைக்காக பழிவாங்கும் சாமுராய் சிங்கன் நரஹச்சி (நரசிம்ம அவதாரம்), 7 அடி உயர கலிஃபுல்லா முக்தர் ( வாமண அவதாரம்), பேராசை பிடித்த வில்லாதி வில்லன் கிரிஸ் ப்ளெச்சர் ( பரசுராம அவதாரம்), மனைவி மீது பேரன்பு கொண்ட அவதார் சிங் (ராம அவதாரம்) தெலுங்கு கலந்த தமிழ் பேசும் பலராம் நாயுடு (பலராம அவதாரம்) , ,மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடும் பூவராகன்(கிருஷ்ண அவதாரம்), விஞ்ஞானி கோவிந்த் ராமசாமி எனப்படும் கோவிந்தராஜன் (கல்கி அவதாரம்)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -