14 years of Ayan : ‘லட்டு ல வச்சேன் னு நெனைச்சியா தாஸ்.... நட்டுல வச்சேன்..’ 14 ஆண்டுகளை நிறைவு செய்த அயன்!
இயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் ஹாரிஸ் இசையில் சூர்யா நடிப்பில் 2009 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் அயன்.
கள்ளக்கடத்தல், மாஃபியா, ரவுடித்தனம் போன்றவற்றை விவரிக்கும் இப்படத்தில் அவ்வப்போது வரும் காதலும் காமெடியும், இதை கமர்ஷியல் ஹிட்டாக்கியது.
சேட்டை நிறைந்த புத்திசாலி கதாநாயகனான, தேவா தனது முதலாளி தாஸிற்காக கடத்தல் வேலைகளில் ஈடுபடுகிறார்
தாஸிற்காக வேலைப்பார்க்கும் சிட்டியின் தங்கையான ஜமுனாவின் மீது உலகம் சுற்றும் வாலிபனுக்கு காதல் வருகிறது. அதே காதல், சிட்டியின் துரோகத்தால் பிரிவை சந்திக்கிறது.
ஸ்டைலிஷ் வில்லன் கமலேஷ், தன்னுடைய ஆதாயத்திற்காக தாஸ் மற்றும் அவரின் கூட்டத்தினருக்கு இன்னல்களை உருவாக்குகிறார். “லட்டு-ல வச்சேனு நினைச்சியா தாஸ்.. நட்டு-ல வச்சேன்..” என மாஸ் வசனம் பேசி, தாஸை காலி செய்கிறார்.
க்ளைமேக்ஸில், தனது முதலாளியை கொன்ற எதிரியை பழிவாங்க சூப்பர் ஸ்கெட்ச் போட்டு, கமலேஷை கொன்று, தனது அம்மாவின் ஆசைப்படி அரசாங்க அதிகாரி ஆகிவிடுகிறார் தேவா.
00