13 years of VTV : 'இன்னும் ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லுதா'...13 ஆண்டுகளை கடந்த விண்ணைத் தாண்டி வருவாயா...!
கௌதம் மேனன் திரைப்படங்களிலேயே ஒரு வித்தியாசமான ஒரு காதல் கதை விண்ணைத்தாண்டி வருவாயா'. இப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்தாலும் இன்றும் நினைவலைகளில் ஊஞ்சலாடும் ஒரு காதல் காவியம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாதலை ஒரு புதிய கோணத்தில் காட்சிப்படுத்தி காதலர்களின் வாழ்க்கையில் புது வேகம் பாய்ச்சிய இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.
கார்த்திக் - ஜெஸ்ஸி கதாபாத்திரங்களாக மாறிய சிம்பு - திரிஷா. இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அனைத்தும் காதலால் நிரம்பி வழிந்தன.
கார்த்திக்-ஜெஸ்ஸி காட்சிகளை அழகு படுத்தியது ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை. ஏ.ஆர்.ஆரின் இசையால் பாடல்கள் அனைத்திலும் காதல் வழிந்தோடியது.
13 ஆண்டுகளை கடந்த பின்பும் காதல் பாடல்களின் பிளே லிஸ்டில் நிச்சயமாக இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும்அடங்கும்.
மேலும், இந்த படத்தில் நடித்த கணேஷ். இந்த படம் மூலம் பிரபலமாக விடிவி கணேஷ் என்று ரசிகர்களால் அறியப்பட்டார்.
இங்க என்ன சொல்லுது 'ஜெஸ்ஸி ஜெஸ்ஸி சொல்லுதா' என்ற அவரின் டைலாக் இன்று வரை பிரபலம்.
இப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை கடந்த நிலையிலும், இப்படத்திற்கு தனி ரசிர்கள் பட்டாளம் இன்றும் உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -