11 Years Of VPVS : 11 ஆண்டுகளை நிறைவு செய்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்!
2013 ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இப்படத்தில் ஸ்ரீ திவ்யா, சூரி, சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், பிந்து மாதவி என பலரும் நடித்து இருந்தனர்.
சிவகார்த்திகேயன்- சூரி இருவரும் ஊருக்குள் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை நடத்தி வருகின்றனர். அதே ஊரில் இருக்கும் சத்யராஜ் மகளை சிவகார்த்திகேயன் காதலிக்க கடைசியில் இருவரும் எப்படி சேர்ந்தனர் என்பதை முழு காமெடி படமாக உருவாக்கி இருந்தார் பொன்ராம்.
இப்படத்தில் வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாக்காத பாக்காத, இந்த பொண்ணுங்கலே, ஊதா கலரு ரிப்பன், என்னடா என்னடா என இமான் இசையில் வந்த அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் கலக்கியது.
படத்தில் கதை பெரிதாக இல்லை என்றாலும், சிவகார்த்திகேயன் சூரி காம்போதான் படம் பெரிய அளவிற்கு வெற்றி பெற்றதற்கு காரணம் என்று கூட கூறலாம். இப்படம் ஜாலியாக ஆரம்பித்து ஜாலியாகவே முடிந்துவிடும்.
சிவகார்த்திகேயன் சூரி காம்போவில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறது