1000 crore club : தங்கல் முதல் பதான் வரை.. 1000 கோடி க்ளப்பில் இணைந்த இந்திய படங்கள்!
இப்போது பான் இந்தியா சினிமா என்ற சொல் பிரபலமாகி வருவதோடு, இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களும் ஆயிரம் கோடி வசூலை எட்டி வருகிறது. ஆயிரம் கோடி வசூல் செய்த படங்களை காணலாம்..
முதன் முதலாக தங்கல்தான் 1000 கோடி வசூலை எட்டிய இந்திய படம். உண்மையான நிகழ்வை எடுக்கப்பட்ட இப்படம், இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரும் வரவேற்பை பெற்றது
பாகுபலியின் முதல் பாகத்தை தொடர்ந்து பாகுபலியின் இரண்டாம் பாகம் 2017ஆம் ஆண்டு வெளியானது .இப்படம் இந்தியா அளவில் நிறைய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி ஆயிரம் கோடி வசூலை கடந்தது.
பாகுபலி,பாகுபலி 2 படத்தை இயக்கிய ராஜமெளலி ஆர் ஆர் ஆர் படத்தையும் இயக்கினார் .இப்படமும் 1000 கோடி வசூலை கடந்தது. ராம் சரணுக்கும், என்.டி.ஆருக்கும் ஆர் ஆர் ஆர் ஒரு முக்கியமான படமாக அமைந்தது
யஷ் நடிப்பில் வெளிவந்த கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்ப்பை பெற்றதால், இரண்டாம் பாகத்திற்கான எதிர்ப்பார்ப்பும் அதிகமானது. எதிர்பார்த்த படியே கே.ஜி.எஃப் 2 வெளியாகி 1000 கோடி வசூலை கடந்து இந்தியா அளவில் பெரிதும் பேசப்பட்டது.
ஷாருக்கான் நடிப்பில் பதான் என்ற படம் பெரும் செலவில் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியானது . எதிர்பார்க்காத வகையில் 1000 கோடி வசூலை ஈட்டிசாதனை படைத்தது