CM Stalin : தஞ்சை காமராஜ் மார்க்கெட்டில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்!
2024 பாராளுமன்ற தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வரும் நிலையில், பல்வேறு கட்சியினர் வாக்கு சேகரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடந்த வாரம் தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை நாள் என மக்களவை தேர்தலுக்குரிய அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுவையில் முதல் கட்டத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கும் அத்தேர்தலுக்கு போட்டியிடும் கூட்டணிகளில் இருந்து வாக்காளர் பட்டியலும் ஒன்றின் பின் ஒன்றாக வெளியானது.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திருச்சி சென்று இருந்தார். அதனை தொடர்ந்து நேற்று இரவே அவர் தஞ்சாவூர் சென்றடைந்தார்
இன்று காலை தஞ்சாவூரில் நடைப்பயிற்சி செய்தார். மேலும், அத்தொகுதியில் நிற்கும் முரசொலிக்கு காமராஜ் காய்கறி மார்கெட்டில் வாக்கு சேகரித்தார்.
முதல்வர் ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடனிருந்தார்.
மார்க்கெட்டில் இருந்த பொதுமக்கள் முதல்வர் ஸ்டாலினுடன் உரையாடி செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இன்று மாலை முதல்வர் ஸ்டாலின், தஞ்சாவூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -