SFI Nation Wide protest Against NEET: நீட் தேர்வு மசோதா ஒப்புதல்; தேசியளவில் இந்திய மாணவர் சங்கம் போராட்டம்
நீட் தேர்வை ஒழிக்க தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி தேசிய அளவில் இந்திய மாணவர்கள் சங்கம் அமைப்பு போராட்டம் நடத்தியது
தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாணவர்கள் சங்கம் தமிழ்நாடு குழு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
நீட் தேர்வில் முறைகேடுகளும், மோசடிகளும் நடப்பது இது முதல்முறையல்ல. நடப்பாண்டிற்கான நீட் தேர்வு வினாத்தாள்கள் ஜெய்ப்பூரில் ரூ.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களிலும் நீட் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே கசிந்துள்ளன. அதேபோல், ஆள் மாறாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் நீட் தேர்வில் 10 மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது
நீட் தேர்வு அமலுக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள் 2010ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 3 ஆயிரத்து 646 பேர் சேர்ந்துள்ளனர். ஆனால், நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட 2017ம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை தமிழ்வழியில் பயின்ற 545 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
ஏ.கே ராஜன் குழு அறிக்கை: தமிழ்நாட்டின் பொதுச்சுகாதாரத்துறை (Public health system) நலிவடையும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகான இந்த நான்கு ஆண்டு காலத்தில் முதல்தலைமுறைக் கல்வி பெறுபவர்களில் இருந்து மருத்துவம் படிக்க வருபவர்கள் 9.74 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், கிராமப்புற மாணவர்களில் மருத்துவம் படிக்க வருபவர்கள் எண்ணிக்கை 12.1 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் தமிழ்வழியில் பயின்றவர்கள் மருத்துவம் படிப்பதில் 12.58 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் குடும்ப வருமானம் 2.5 லட்சத்துக்கும் குறைவானவர்களில் இருந்து மருத்துவம் படிப்பவர்களில் 10.45 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் கூறும் அறிக்கை இதன் காரணமாக நகர்ப்புறங்களில் மருத்துவராகப் பணிபுரிய விரும்பும் மருத்துவர்கள் அதிகரிப்பார்களே ஒழிய கிராமப்புறங்களில் மருத்துவர்கள் கிடைப்பதே திண்டாட்டமாகும் என்பதையும் குறிப்பிடுகிறது
தேர்வு என்பது கல்வியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆனால் கல்வியின் தரத்தை உயர்த்துகிறேன் என்கிற பெயரில் தேர்வைக் கடினமாக்குவதால் இதுவரை பல்கலைக்கழகத்தில் நுழையாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அது முற்றிலுமாக ஒதுக்கி வைக்கிறது - டாக்டர்.பி.ஆர் அம்பேத்கர்