Viduthalai Stills: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் விடுதலை படத்தின் புதிய புகைப்படங்கள்!
இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படைப்பான 'விடுதலை' திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மற்றும் நடிகர் சூரி இதில் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் முற்றிலும் மாறுபட்ட களங்களில், தன் தனித்த முத்திரை கொண்ட படங்களினால் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்து புகழ்பெற்றவர்.
விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரி கதை நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடிக்கவுள்ளனர். இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக இப்படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியம்ங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்தது
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் வெற்றி மாறன். இதனால் இப்படம் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -