Post Office Schemes : பணம் சேமிக்கும் திட்டமிருக்கா? போஸ்ட் ஆஃபிஸில் ஈசியா சேர்க்கலாம்!
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (SB) - தனிநபர் / கூட்டுக் கணக்குகளில் ஆண்டுக்கு 4.0 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. திறப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்ய வேண்டும்.ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வட்டி கணக்கில் வரவு வைக்கப்படும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரெகரிங் டெபாசிட் திட்டம் - RD - தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது (காலாண்டிற்கு கூட்டு வட்டி). மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.100 முதலீடு செய்யலாம்12 தவணைகளை வெற்றிகரமாக முடித்த பிறகு, உங்கள் கணக்கில் இருக்கும் வைப்புத் தொகையில் 50% வரை கடனைப் பெறலாம்.
தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு (TD):- குறைந்த பட்சம் 1000 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம்.கணக்கை 1 வருடம், 2 வருடம், 3 வருடம், 5 வருடங்கள் விகிதத்தில் தொடரலாம்.5 வருட கணக்குகளுக்கு வட்டி விகிதம் 7.5 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கு (MIS) -குறைந்த பட்சம் ரூ.1000 செலுத்தி கணக்கு தொடங்கலாம். தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4 சதவிகிதம் ஆக உள்ளது. அதிகபட்ச முதலீட்டு வரம்பாக தனிநபர் கணக்கிற்கு ரூ. 9 லட்சமாகவும், கூட்டுக் கணக்கிற்கு ரூ.15 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) -குறைந்தபட்ச வைப்புத்தொகையாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வரம்பாக ஒரு தனிநபர் கணக்கிற்கு ரூ.30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 8.2 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது
5 வருட தேசிய சேமிப்புச் சான்றிதழ் -வட்டி விகிதம் ஆண்டுதோறும் 7.7 சதவிகிதம் கூட்டு வட்டியாக வழங்கப்படுகிறது.திட்டத்தின் முடிவின்போது மட்டுமே தொகை பயனாளருக்கு வழங்கப்படும் குறைந்தபட்சம் ரூ. 1000 முதலீடு செய்யலாம், அதிகபட்ச வரம்பு இல்லை.வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கு பெறலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -