✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Gold and silver rate today : திடீர் திருப்பம்.! தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது- ஒரு சவரன் என்ன விலை.? வெள்ளி விலை நிலவரம் இதோ...

கு. அஜ்மல்கான்   |  20 Mar 2026 09:46 AM (IST)
1

தங்கத்தின் விலை 2025-ம் ஆண்டின் இறுதியில் வரலாறு காணாத வகையில் சவரனுக்கு 1 லட்சத்தைத் தொட்டது. அதன்பிறகும் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. ஜனவரி 29 அன்று, சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1.34 லட்சத்தைத் தாண்டி, வரலாற்றுச் சாதனை படைத்தது. இதற்கு முக்கிய காரணமாக பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகள் டாலருக்கு நிகராக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தை அதிகளவு வாங்கி குவித்தார்கள்.

Continues below advertisement
2

ஆனால் அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலையானது படிப்படியாக குறைய தொடங்கியது. அந்த வகையில் தற்போது ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தங்கம் விலையானது குறைய தொடங்கியது.

Continues below advertisement
3

உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய வர்த்தக வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயர்ந்துவருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெயில் அதிகம் முதலீடு செய்வதால் அது டாலரின் மதிப்பை மேலும் வலுவடையச் செய்து, தங்கத்தின் விலையைக் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

4

பிப்ரவரி 16 - சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,17,680 ரூபாய்க்கும் விற்பனை. பிப்ரவரி 17- சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,17,200 ரூபாய்க்கு விற்பனை. பிப்ரவரி 18- சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 1,16,560 ரூபாய்க்கு பிப்ரவரி 19- காலை கிராம் ஒன்றுக்கு 270 ரூபாய் குறைந்து 14,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 2160 ரூபாய் குறைந்து 1,14,400 ரூபாய்க்கு விற்பனை. மாலையிலும் தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு மேலும் 400 ரூபாய் குறைந்து 13,900 ரூபாய்க்கு சவரனுக்கு 3200 ரூபாய் குறைந்து 1,11,200 ரூபாய்க்கு விற்பனை. நேற்று ஒரே நாளில் 5,360 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.

5

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 13,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல வெள்ளியின் விலையானது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்து 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • வணிகம்
  • Gold and silver rate today : திடீர் திருப்பம்.! தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது- ஒரு சவரன் என்ன விலை.? வெள்ளி விலை நிலவரம் இதோ...
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.