Interim Budget 2024 : முழு பட்ஜெட்டிற்கும் இடைக்கால பட்ஜெட்டிற்கும் என்ன வித்தியாசம்?
இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் தேதியில் மத்திய பட்ஜெட்டை வெளியிடுகிறது. இந்த பட்ஜெட் வரவிருக்கும் நிதியாண்டிற்கான நிதி வரைபடமாக செயல்படுகிறது. (Photo Credits:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇருப்பினும், 2024ல் தேர்தல் நடைபெறுவதால், மத்திய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு மாறாக பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. முழு பட்ஜெட் - இடைக்கால பட்ஜெட் ஆகிய இரண்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன என்று பார்க்கலாம்.
வழக்கமான பட்ஜெட் ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை வரவிருக்கும் நிதியாண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கையாக செயல்படுகிறது. இந்த ஆவணம் அரசாங்கத்தின் வருவாய் ஆதாரங்கள் மற்றும் இந்த குறிப்பிட்ட காலத்திற்கான பரிந்துரைக்கப்பட்ட செலவுகள் பற்றிய விரிவான பட்டியலை வழங்குகிறது.
வழக்கமான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன், நாடாளுமன்ற விவாதம், ஆய்வு, திருத்தங்கள் ஆகியவை மேற்கொள்ளப்படும்
பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் ஆண்டில், இடைக்கால பட்ஜெட் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படுகிறது.
இடைக்கால பட்ஜெட் என்பது, தற்போது உள்ள மத்திய அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் மீதமுள்ள மாதங்களுக்கு ஒரு தற்காலிக நிதி வரைபடமாகச் செயல்படும். இடைக்கால பட்ஜெட், பெரிதும் விவாதம் இன்றி நிறைவேற்றப்படும்
இந்தக் காலக்கட்டத்தில் உடனடிச் செலவினங்களைக் கவனித்துக்கொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்திய நிதியத்திலிருந்து நிதியைப் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை புதிய அரசாங்கத்திற்கு வழங்க ‘ஓட் ஆன் அக்கவுண்ட்’பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் முடிவடைந்து, புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின் விரிவான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -