Budget 2024 Expectations: நாடே காத்திருக்கும் பட்ஜெட் 2024! என்னென்ன அறிவிப்புகளுக்கு வாய்ப்பு? எகிறும் எதிர்பார்ப்பு!
இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வேஸின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2.8 முதல் 3 லட்சம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கட்டுமான பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
2 உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் 97 தேஜாஸ் மார்க்-1A விமானங்களை வாங்கும் முக்கியமான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனிநபர் வரி செலுத்துவோருக்கான ஒட்டுமொத்த வரி விலக்கு வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெண் தொழில்முனைவோருக்கு வரிச் சலுகைகள் வழங்குவது குறித்தும், பணிபுரியும் தாய்மார்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -