Nirmala Sitharaman : இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்த சேலை பற்றி தெரியுமா?
கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3வது முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசின் முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யவுள்ளார். (Image Courtesy : PTI)
இதுவரை தொடர்ச்சியாக 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள சீதா ராமன் அணியும் சேலையின் மீது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். (Image Courtesy : PTI)
முதன் முதலாக பட்ஜெட் தாக்கல் செய்த போது மங்களகிரி புடவையை அணிந்து இருந்தார். பின்னர், போச்சம்பள்ளி, பூம்காய் போன்ற சேலை வகைகளை அணிந்தார். (Image Courtesy : PTI)
2023 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலின் போது தற்போதைய நுகர்வோர் விவகாரம் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பரிசாக கொடுத்த நவலகுண்டா எம்பிராய்டரியுடன் கையால் நெய்யப்பட்ட சிவப்பு இல்கல் புடவையை மத்திய அமைச்சர் நிர்மலா அணிந்து இருந்தார். (Image Courtesy : PTI)
இந்த முறை வாடாமல்லி பார்டர் போட்ட ஹாஃப் வொயிட் சேலையை அணிந்துள்ளார். தங்க நிற ஜரி வேலைப்பாடு கொண்ட இந்த புடவையில், தங்க நிற கட்டங்களும் காணப்படுகிறது. (Image Courtesy : PTI)