Exciting Cars : கார் ஓட்டும் ஆசையை தூண்டி விடும் மாடல்கள் - அதுவும் ரூ.15 லட்சம் பட்ஜெட்டில்!
ரூ.15 லட்சம் பட்ஜெட்டில் ஆச்சரியப்படுத்தும் கார் மாடல்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஹூண்டாய் i20 N லைன் சிறந்த ஓட்டுநர் விரும்பும் காராக உள்ளது. 6-ஸ்பீடு மேனுவல்/ 7-ஸ்பீடு டிசிடியுடன் இணைக்கப்பட்ட 1.0லி டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது. வழக்கமான i20 ஐ விட கடினமான சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. ஸ்போர்ட்டியான வித்தியாசமான பாடிகிட்டைக் கொண்டுள்ளது. ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம்
மாருதி சுசுகி ஃபிராங்க்ஸ் மாருதி சுஸுகி பலேனோவை அடிப்படையாகக் கொண்டது. இது 1.0L டர்போ பெட்ரோல் இன்ஜினையும் பெறுகிறது. 5-ஸ்பீடு மேனுவல்/ 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் விருப்பத்தைக் கொண்டுள்ளது. ஓட்டுநர் விரும்பும் காராக இருக்கும் இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.9.72 லட்சம்
ஸ்கோடா ஸ்லாவியா ஒரு சிறந்த செடான் மாடலாகும். இதில் 1.0லி டர்போ பெட்ரோல் அல்லது 1.5லி டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உள்ளது. 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் அல்லது 7-ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன்கள் அடங்கும். ஸ்லாவியாவின் ஆரம்ப விலை ரூ.13.43 லட்சம்
ஹூண்டாய் வென்யூ என் லைன் 6-ஸ்பீடு மேனுவல்/ 7-ஸ்பீடு டிசிடியுடன் இணைக்கப்பட்ட 1.0லி டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. வேறுபட்ட சஸ்பென்ஷன், பாடி கிட், பின்புற டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அனைத்து கருப்பு உட்புறங்களையும் பெறுகிறது. வென்யூ என் லைன் ஆரம்ப விலை ரூ. 12.07 லட்சம்
ஹோண்டா சிட்டி அதன் சவாரி மற்றும் பொது மக்களிடையே நம்பகத்தன்மைக்காக பிரபலம். 1.5L i-VTEC NA பெட்ரோல் இன்ஜின் கவனம் ஈர்க்கிறது. மென்மையான சஸ்பென்ஷனைக் கொண்டிருந்தாலும் இது நன்றாகக் கையாளுகிறது. சிட்டியின் ஆரம்ப விலை ரூ.12.08 லட்சம்
மஹிந்திரா XUV300 டர்போ ஸ்போர்ட், அதன் பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த இன்ஜினை வழங்கும் அதன் பிரிவில் மிகவும் விரும்பப்படும் காராகும். இது 6-ஸ்பீடு மேனுவல் உடன் 1.2லி டர்போ பெட்ரோல் கொண்டுள்ளது. XUV300 Turbo Sport இன் ஆரம்ப விலை ரூ.10.35 லட்சம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -