Bike Maintenance: பைக் அதிகம் செலவு வைக்காமல் இருக்கனுமா? பராமரிக்க டிப்ஸ்!
முதலில் பைக்கில் சரி பார்க்க வேண்டியது இன்ஜின் ஆயில். இன்ஜினில் ஆயில் சரியாக இருந்தாலே வண்டி செலவு எதுவும் வைக்காது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவண்டியில் உள்ள ஏர் ஃபில்ட்டேரையும், அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அப்படி சுத்தம் செய்யாமல் விட்டால் மைலேஜ் குறையலாம், ஸ்டார்டிங் பிரச்சனை ஏற்படலாம்.
வண்டியில் செயினை நார் அல்லது பிரஷ் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். அப்படி கிளீன் பண்ணாவிட்டால், செயின் இறுகிவிடும் அல்லது செயின் அறுந்துவிடலாம்.
வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் ஸ்பார்க் பிளக்கை கவனிக்க வேண்டும். ஸ்பார்க் ப்ளக் பழுதாகி இருந்தால் எளிதில் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்.
பைக்கை 6 முதல் 8 மாதத்திற்கு ஒரு முறையாவது ஜெனரல் சர்வீஸ் செய்யவேண்டும் . முறையாக சர்வீஸ் செய்து வந்தால் வண்டியின் ஆயுட்காலம் அதிகரிக்கும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -