Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Vastu Tips: வீட்டில் பணம் தங்க வேண்டுமா? வாஸ்து சொல்வதென்ன!
நம் வீட்டினில் எதிர்மறை எண்ணங்கள் இருந்தால் அது நம் உள்ளத்தை, நடத்தையை பாதிக்கும். வாஸ்து தோசம் இருந்தால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நிலவக் கூடும். அதனால் உங்கள் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் உருவாகலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவீட்டில் நேர்மறை எண்ணம் நிலைத்து நிற்க எப்போதும் வீட்டின் வாயிலை சுத்தமாக வைத்திருங்கள். சிறு செடிகளை வீட்டின் வாயிலில் வையுங்கள். வீட்டின் முகப்பு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
உங்கள் வீட்டில் உள்ள வடக்கு அல்லது கிழக்கு திசையில் மதிப்புமிகு பொருட்களை வைக்கவும். இது வீட்டில் வளம் செழிக்க உதவும். உங்களை நிதிப் பிரச்சினைகள் துரத்தாது. உங்களது பணி சார்ந்த கணினி போன்ற உபகரணங்களை அங்கே வைக்கலாம்.
நம் வீட்டில் ஏதேனும் குழாய் இருந்து அதிலிருந்து தண்ணீர் வடிந்துகொண்டே இருக்குமேயானால் வீட்டில் பணம் தங்காது. அதனால் வீட்டின் குழாயில் நீர் கசிந்தால் அதனை உடனடியாக சரி செய்யவும். அவ்வாறு செய்யாமல் தண்ணீர் வழிந்துகொண்டே இருந்தால் அது கெட்ட சகுணமாகும்.
வீட்டின் வடக்கே ஒரு கண்ணாடியை வைக்கவும். அது வீட்டிற்கு நேர்மறையான சக்தியைக் கொடுக்கும். வீட்டில் உள்ளவர்களின் ஆயுளை நீட்டிக்கும் சக்தியையும், நிதி நிலைமை மேம்படும் சூழலையும் கொண்டுவரும். வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒரு வீட்டில் கண்ணாடி அமைந்துள்ள இடம் மனதிற்கு உற்சாகம் கூட்டும். நேர்மறையான சிந்தனைகளை வகுக்கும். வீட்டின் வடகிழக்கு மூலையை சுத்தம் செய்து அங்கே ஒரு தொட்டி வைத்து அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதை அலங்காரம் செய்யவும். அது நல் ஆரோக்கியத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரும்
வடக்கு என்பது குபேர மூலை. அங்கே இருந்து வீட்டிற்கு நேர்மறை அதிர்வுகள் கிடைக்கும். அதனால் அங்கே இருக்கும் லாக்கரின் முன் ஒரு கண்ணாடி வைத்தால் நிதி நிலைமை உயரும். பிரச்சினைகள் தீரும். வளம் பெறுகும். மகிழ்ச்சி நிலைக்கும். வடக்கிலும், கிழக்கிலும் கண்ணாடிகளை வைக்கலாம். செவ்வக அல்லது சதுர வடிவ கண்ணாடிகளை வைக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -