வாஸ்து டிப்ஸ்: உங்கள் சமையலறையை இப்படி அமைத்துப் பாருங்கள்; அப்புறம் தெரியும் பலன்!

தானியங்கள் எல்லாம் வீட்டில் என்றுமே நிறைந்திருக்கும். மேலும் வீட்டில் செழிப்பும் மகிழ்ச்சியும் பொங்கும். பற்றாக்குறை என்பது என்றுமே வராது என நம்பப்படுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
நெருப்பு மற்றும் நீர் ஆகியவை சமையலறையின் அடிப்படை கூறுகள் ஆகும். சமையலறை எப்பொழுதும் கிழக்கு அல்லது தென்கிழக்கை நோக்கியே இருக்க வேண்டும். இது அனைவரது, குறிப்பாக பெண்களின் ஆற்றலையும் அதிகரிக்கும். செரிமானத்தையும் மேம்படுத்தும்.

பாத்திரம் கழுவும் தொட்டி வடக்கு அல்லது வடகிழக்கு நோக்கியிருப்பது வீட்டில் பண வரவை அதிகரிக்கும்.
சுவரின் வண்ணம் நடு நிலை வெள்ளை அல்லது ஐவரி வெள்ளையாக இருக்க வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு அல்லது பீச் ஆகிய நிறங்களையும் பயன்படுத்தலாம். வாஸ்துவின் பிரகாரம் மரவேலைகளே சிறந்தது.
குப்பைத் தொட்டி வடமேற்கு அல்லது மேற்கு திசையில் வைக்க வேண்டும். அப்போதுதான் மனதில் உள்ள குப்பைகளும் விலகும்.
உங்கள் சமையலறையை இரவில் சுத்தமில்லாமல் விட்டுச் செல்லாதீர்கள். தூங்கும் முன்னர் எல்லா பாத்திரங்களையும் சுத்தமாக கழுவி வைத்துவிட்டு உறங்குங்கள். இல்லாவிட்டால் அது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை கொண்டு வரும் .
உங்கள் கேஸ் ஸ்டவ்வின் பர்னர்களில் அடைப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.
சமையலறையில் உள்ள குழாய்களை நன்றாக மூடிச் செல்ல வேண்டும். அதிலிருந்து தண்ணீர் சொட்டும்படி வைத்தால் அது நிதி இழப்பை ஏற்படுத்தும். மின் சாதனங்களை தென் கிழக்கு நோக்கி வைத்தல் நலம் தரும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -