Rice Wheat Production : தென் மாநிலங்களை பின்னுக்கு தள்ளும் வட மாநிலங்கள்.. இந்தியாவின் பிரதான உணவுகளை உற்பத்தி செய்யும் மாநிலங்களின் விவரம் உள்ளே!
இந்திய மக்களின் பிரதான உணவு பட்டியலில் அரசி, கோதுமை ஆகிய இரண்டும் முக்கிய பங்கு வகிக்கிறது. கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்த இவை இரண்டும் பெரும் அளவில் உட்கொள்ளபடுவதால், இவை அதிக அளவில் தேவைப்படுகிறது.
வட மாநிலத்தவர்களின் உணவுக்கு தேவைப்படும் கோதுமையின் உற்பத்தி பற்றி முதலில் காண்போம்.
32.42 சதவீத கோதுமையை அறுவடை செய்யும் உத்தர பிரதேசம் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கிறது.
இதனை தொடர்ந்து 16.08 சதவீத கோதுமையை உற்பத்தி செய்யும் மத்திய பிரதேசம் இரண்டாம் இடத்தையும் 15.65 சதவீத கோதுமையை உற்பத்தி செய்யும் பஞ்சாப் மூன்றாவது இடத்தையும் பிடிக்கிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் பெரும்பாலாக அரிசியின் தேவை அதிகமாக இருக்கிறது.
13.62 சதவீத அரிசியை உற்பத்தி செய்யும் மேற்கு வங்காளம் முதல் இடத்திலும் 12.81 சதவீத அரிசியை அறுவடை செய்யும் உத்தர பிரதேசம் இரண்டாம் இடத்திலும் 9.96 சதவீத அரிசியை உற்பத்தி செய்யும் பஞ்சாப் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை டெல்டா பகுதிகளில் அரிசி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. கோதாவரி, கிருஷ்ணா, காவேரி ஆகிய நதிகளின் அருகில் இருக்கும் இடமே டெல்டா பகுதி என்பது குறிப்பிடதக்கது.