திருவாரூர் மாவட்டத்தில் ‘நிழல் இல்லா நாள்இன்று  சோதனை மூலம் மாணவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.


 "வெளிச்சத்தில் துணைக்கு வருவான் இருட்டில் துணைக்கு வர மாட்டான்" அவன் யார்? என்ற விடுகதைக்கு பதில் நிழல் ஆனால் அந்த நிழல் கூட ஆண்டுக்கு 2 நாள் துணைக்கு வராது சூரியன் நேர் உச்சிக்கு வருவதால் ‘நிழல் இல்லா நாள்’ (பூஜ்ஜிய நிழல்) என்று அழைக்கப்படுகிறது. சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால் சூரியன் எப்போதும் சரியாக தலைக்கு மேல் வருவதில்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும். சூரியன் செங்குத்தாக வரும்போது, ஓரிடத்திலுள்ள ஒரு பொருளுடைய நிழலின் நீளம், ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.




இந்த அரிய, அதிசய நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாள்களில் ஏற்படும். சூரியனின் வடக்கு நகர்வு நாள்களில், ஒரு நாளும், தெற்கு நகர்வு நாள்களில் ஒரு நாளும் என ஆண்டுக்கு இருமுறை நிழல் இல்லாத நாள் ஏற்படும். பொதுவாக மகர ரேகைக்கு 23.45 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.45 டிகிரி வடக்காகவும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வை கண்டு களிக்கலாம். பகல் 12 மணிக்குத்தான் பொருள்களின் நிழல் பூஜ்ஜியமாகும். அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இன்று இந்த அரிய நிகழ்வு நடைபெற்றது. மீண்டும் 3 மாத இடைவெளியில் ஆகஸ்ட் மாதத்தில்(25.08. .2022) வியாழக்கிழமைஅன்று பகல் 12: 00மணி முதல் 12:15 மணிவரை கானமுடியும். குறிப்பாக திருவாருர், திருத்துறைப் பூண்டி, கூத்தாநல்லூர், குடவாசல் பகுதிகளில் 12:11 மணிக்கும், மன்னார்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் பகல்12:12 மணிக்கும்  நாம் வெய்யிலில் நிழலானது தெரிந்தது. 




இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்டத் தலைவர் யு.எஸ்.பொன்முடி கூறுகையில், அறிவியலாளர்களால் நிழல் இல்லா நாள் என கூறப்படும் அதிசய நாளில் நிழலானது வழக்கமாக விழும் நிழலை விட வித்தியாசமாக இருக்கும். அதாவது மற்ற நேரங்களில் சிறிது பக்கவாட்டில் விழும் நிழல் சரியாக நேராக விழும். இதற்கு சூரியனின் கதிர்கள் பூமியின் பூமத்தியரேகையின் மீது சரியாக விழுவது தான் காரணம். சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் நிழலானது பொருளைவிட்டு விலகிச் செல்லாமல் நேராக விழுகிறது. வழக்கமாக சூரியன் வடகிழக்கு அல்லது தென்கிழக்கில் உதிக்கும். ஆனால் இந்நாளில் சூரியன் சரியாக கிழக்கில் உதித்து மேற்கில் மறையும். இந்த ஆண்டு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மன்னார்குடி பகுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களை ஒன்று திரட்டி  பைப் துண்டுகள், உருளை வடிவான டப்பாக்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்ற பொருட்களை  வெயிலில் வைத்து  நிழல் பக்கவாட்டில் விழும் பிறகு நிழலானது குறைந்து கொண்டே வந்து 12:11 மணி முதல் 12:12 மணி வரை அந்த பொருளின் அடியிலேயே வந்து விடும் அப்பொழுது நிழல் இல்லை என்பதை அவர்களே சோதனை மூலம் மாணவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.