மலையாள உலகின் பிரபல நடிகர் திலீப். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக திலீப்பை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், போலீசார் திலீப்பின் செல்போன் மற்றும் கடத்தலில் ஈடுபட்டிருந்த மற்ற நபர்களின் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், 11 ஆயிரத்து 161 வீடியோக்கள் மற்றும் 22 ஆயிரம் ஆடியோக்கள் மற்றும் 2 லட்சம் போட்டோக்களை கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களையும் திரட்டவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை தடயவியல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணையிலும், வழக்கு விசாரணையின்போதும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை நடிகர் திலீப் கொலை செய்ய முயற்சித்தாக ஒரு குற்றச்சாட்டும் சமீபத்தில் எழுந்தது. மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் திலீப்பின் சகோதரர், அவரது மைத்துனர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனால், மலையாள திரையுலகினர் மட்டுமின்றி பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வழக்கின் அறிக்கை ஏற்கனவே 2 லட்சம் பக்கங்களை கடந்துள்ள நிலையில், இந்த அறிக்கை மேலும் பல பக்கங்களை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, கடத்தல் வழக்கிற்கு தொடர்புடைய 11 ஆயிரம் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்