'ஒன்னாயிரம், இரண்டாயிரம்..’ 90 பைசாவுக்கு வாங்கி, 2 லட்சத்திற்கு ஏலம் போன ஸ்பூன்.. காரணம் என்ன?

90 பைசா மதிப்புள்ள ஸ்பூன் ஒன்று இணையதள ஏலத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

பொதுவாக நாம் பொருட்களை வாங்கும்போது முதலில் கவனிப்பது அந்தப் பொருளின் விலை அதற்கு ஏற்றதாக உள்ளதா என்பதுதான். அப்படி அது அதிகமாக இருக்கும் பட்சத்தில் நாம் அப்பொருளை வாங்காமல் விட்டுவிடுவோம். ஆனால் அதற்கு மாறாக ஒருவர் ஒரு பொருளை மிகவும் குறைவான விலைக்கு வாங்கியுள்ளார். அந்தப் பொருள் மீது சற்று சந்தேகம் வந்துள்ளது. அதை சோதனை செய்து பார்த்தப்பிறகு அவருக்கு அடித்தது மிகப் பெரிய ஜாக்பாட். அது என்ன? எப்படி அவருக்கு இவ்வளவு பெரிய ஜாக்பாட் அடித்தது?

Continues below advertisement

லண்டன் நகரில் ஒரு பழைய பொருட்கள் விற்கும் இடத்திலிருந்து ஒருவர் ஸ்பூன் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த ஸ்பூனை இந்திய மதிப்பில் சுமார் 1 ரூபாய்க்கும் குறைவாக வாங்கியுள்ளார். அந்த ஸ்பூன் பார்ப்பதற்கு இயல்பான ஸ்பூனைவிட சற்று மிகவும் வித்தியாசமாக இருந்துள்ளது. இதனால் அந்த நபருக்கு இந்த ஸ்பூன் குறித்த ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இதை சரி செய்ய ஒரு பழைய பொருட்களை ஆராய்ச்சி செய்யும் நிலையத்திடம் சென்று இந்த ஸ்பூனை பரிசோதனை செய்ய வேண்டியுள்ளார். அதன்படி அவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த ஸ்பூன் சுமார் 13-ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது என்று தெரியவந்துள்ளது. 


அத்துடன் இந்த ஸ்பூன் மதிப்பு சுமார் 51,712 ரூபாய் ஆக இருக்கும் என்று அவர்கள் கணித்துள்ளனர். இந்தச் செய்தியை கேட்டவுடன் அவருக்கு பெரிய ஆனந்தம் ஏற்பட்டுள்ளது. தனக்கு ஒரு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது என சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளார். அப்போது இவருக்கு இந்த ஸ்பூனை ஒரு ஆன்லைன் ஏலத்தில் விற்க வேண்டிய யோசனை தோன்றியுள்ளது. அதை பயன்படுத்தி இந்த ஸ்பூன் தொடர்பாக ஒரு சிறப்பான ஏல விளம்பரத்தை தயார் செய்துள்ளார். அதன்பின்னர் ஆன்லைன் மூலம் இந்த ஸ்பூனிற்கு ஏலம் நடைபெற்றது. இதை சொமர்செட் பகுதியில் உள்ள ஒரு ஏலம் நடத்தும் நிறுவனம் நடத்தி கொடுத்துள்ளது.

அந்த ஏலத்தில் இந்த ஸ்பூனை இயல்பான விலையைவிடை சுமார் இரண்டு மடுங்கு அதிகமாக ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார். அதாவது இந்த ஸ்பூனை ஏலத்தில் 1,97,000 ரூபாய்க்கு ஒருவர் ஏலம் எடுத்துள்ளார். ஏலக் கட்டணம் மற்றும் அதற்கான வரி ஆகியவற்றை மொத்தமாக சேர்த்து இந்த ஸ்பூனை அந்த நபர் 2 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஒரு செலவும் இல்லாமல் சுமார் 2 லட்சம் ரூபாய் அவருக்கு கிடைத்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்தப் பணத்தை தன்னுடைய விடுமுறை செலவிற்கு பயன்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 90 பைசாவிற்கு ஒரு பொருளை வாங்கி அதை 2 லட்சம் ரூபாய்க்கு விற்று அந்த நபர் லாபம் ஈட்டியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க:ஆல்ஃப்ஸ் மலை உச்சியிலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்த யூடியூப் பிரபலம்

Continues below advertisement
Sponsored Links by Taboola