சீன அரசாங்கத்தின் உயர்மட்ட சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி,  ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 3.7 கோடி பேர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இது அந்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதை காட்டுகிறது.


சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணம் மற்றும் தலைநகர் பெய்ஜிங்கில் வசிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அரசாங்கத்தின் உயர்மட்ட சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி, இந்த வாரம் ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 37 மில்லியன் மக்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம், இது நாட்டில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதை காட்டுகிறது.






இதனிடையே, இந்தியாவில் கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொரோனா நிலைமை குறித்து உயர்மட்ட குழுவுடன் ஆலோசனையில் நேற்று ஈடுபட்டார்.


மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் உயர் அதிகாரிகள் இந்த விர்ச்சுவல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


புதிய வகை கொரோனா விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய அவர், சீனாவில் கொரொனா பரவல் நிலவரத்தை இந்தியா கவனித்து வருகிறது. கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.


இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருகிறது. இருப்பினும், புதிய  கொரோனா வகையை கண்டறிய இந்தியாவில் சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை தோராயமான மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வார தொடக்கத்தில், எந்தவொரு புதிய கொரோனா வகைகளையும் உற்று கவனிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டு கொண்டு வருகிறது.