உலகின் அதிக வயதுக்கொண்ட நபர் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஜுவான் விசென்டே பெரெஸ் என்னும் நபர் , இன்னும் சில தினங்களில் தனது அடுத்த பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.
வெனிசுலா நாட்டை சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் 1909 ஆம் ஆண்டு, யூட்டிகியோ டெல் ரொசாரியோ பெரெஸ் மோரா மற்றும் எடெல்மிரா மோரா ஆகியோருக்கு பத்து குழந்தைகளில் ஒன்பதாவது குழந்தையாக பிறந்தவர். இவருக்கு இப்போது 112 வயதாகிறது. வருகிற மே 27 ஆம் தேதி 113 வயதை எட்டவுள்ளார். விரைவில் பிறந்தநாளை கொண்டாடவுள்ள அவரிடம் நீண்ட ஆயுளுக்கான டிப்ஸ் கொடுங்களேன் தாத்தா என கேட்டதும் ,அதற்கு அவர் “ கடினமாக உழைக்கவும், விடுமுறையில் ஓய்வெடுக்கனும், சீக்கிரம் தூங்கச் செல்லவும், ஒரு கிளாஸ் அகார்டியன்ட் குடிக்கவும் (கரும்பினால் செய்யப்பட்ட பிராந்தி வகை ) தினமும் கடவுளை நேசியுங்கள், எப்போதும் அவரை உங்கள் இதயத்தில் சுமந்து கொள்ளுங்கள்." என கூலாக பதிலளித்துள்ளார். தனது அப்பா மருத்துவரிடம் சிகிச்சை எடுக்க வேண்டிய எந்தவொரு நோயாலும் பாதிப்படையவில்லை . அவர் தனது 112 வயதிலும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் என அவரது மகள் நெலிடா பெரெஸ் தெரிவித்துள்ளார்.
ஜுவான்தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை மறைந்ததால் அதன் பிறகு தொடர்ந்து கல்வி கற்கவில்லையாம். ஆனாலும் தனது குடும்பத்தில் இருந்த நிலப்பிரச்சனையை போக்க வேண்டும் என்பதற்காகவே 10 ஆண்டுகள் கரிகுவேனாவில் ஊர்த்தலைவராக இருந்திருக்கிறார்.அதன் பின்னர் ஜுவான் 1937 இல் எடியோஃபினா டெல் ரொசாரியோ கார்சியாவை என்னும் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். உடல்நல குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவரது மனைவி 1997 இல் உயிழந்தார். இந்த தம்பதிகளுக்கு 11 குழந்தைகள். தற்போது அவர்களுக்கு திருமணமாகி 41 பேரக்குழந்தைகள், 18 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 12 கொள்ளுப் பேரக்குழந்தைகள் ஜூவானுக்கு உள்ளனர்.
2019 ஆம் ஆண்டில், அவர் தனது 110 வது பிறந்தநாளைக் கொண்டாடியதன் மூலம் ஜூவான் , வெனிசுலாவிலிருந்து முதல் ஆண் சூப்பர்சென்டேரியன் என கொண்டாடப்பட்டார்.
ஸ்பெயினின் அதிக வயதுக்கொண்ட சாடர்னினோ டிலா ப்யூன்டே Saturnino de la Fuente Garcia ஜனவரி 18, 2022 அன்று 112 ஆண்டுகள் மற்றும் 341 நாட்களில் காலமானதை அடுத்து ஜூவான் அவரது ரெக்கார்டை முறியடித்து , கின்னஸ் ரெக்கார்டை கைப்பற்றினார். தான் மக்கள் மத்தியில் மனைவி மற்றும் தனது மதத்திற்கு விசுவாசமாக இருந்தவர் என்றும் கடினமான உழைப்பாளி என்றும் கொண்டாடப்பட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.