உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வரும் புதிய வகையிலான உருமாறிய கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு (The World Health Organisation (WHO)) புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிவதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திகொள்ளாத மக்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஒமிக்ரான் வைரஸின் புதிய திரிபு பரவலால் உலக நாடுகள் நீண்ட தூர விமான பயணத்தின்போது பயணிகள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பாவில் XBB.1.5 திரிபு பரவி வருகிறது. அமெரிக்காவில் இந்த வகை திரிபு தான் இப்போது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த திரிபு உலகம் முழுவதும் இன்னொரு அலையை ஏற்படுத்துமா என்று இப்போதே கணிக்க முடியாது என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், ஓமிக்ரான் வைரஸின் புதிய திரிபு பரவலால் உலக நாடுகள் நீண்ட தூர விமான பயணத்தின்போது பயணிகள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவியது. கொரோனா பரவியதையடுத்து உலகம் முழுவதும் திகைத்து முடங்கியது. உலகமே ஊரடங்கு, தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி என கொரோனாவுடன் போராடத் தொடங்கியது. ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஓமிக்ரான் என கொரோனா நிறைய திரிபுகளாக உருமாறியுள்ளது. இவற்றில் டெல்டா திரிபு தான் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனாவில் நிறைய உயிர்கள் பலியாகவும் டெல்டா திரிபு தான் காரணமாக இருந்தது. இந்நிலையில் சீனாவில் நவம்பர் இறுதி தொடங்கி மீண்டும் ஓமிக்ரானின் புதிய திரிபு ஒன்று பரவிவருகிறது.
சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருக்கும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்து சீனா அரசாங்கம் எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடாததால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வந்தது.
புதிய விதிமுறைகள் என்னென்ன?
கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளவர்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.அறிகுறிகள் கண்டுப்பிடிக்கப்படும் நாள் முதல் இதை கடைப்பிடிக்க வேண்டும்.
ஆண்டிஜென் ராப்ட் டெஸ்ட் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றால் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு 10 நாட்கள் காத்திருக்காமல், உடனடியாக வீடு திரும்பலாம்.
அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களை 5 நாட்கள் தனிமைப்படுத்துதல் கண்காணிக்க வேண்டும்.
பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் தவறாமல் முககவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
நாசி வழி தடுப்பு மருத்தான ‘Paxlovid’ நிறுவனத்தின் ’ nirmatrelvir-ritonavir ’ என்ற பூஸ்டர் டோஸ்சை செலுத்தவும் பரிந்துரைத்துள்ளது.