சர்வதேச அளவில் இந்த ஆண்டு முதன்முறையாக உணவு விலை அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் அங்கமான உணவு மற்றும் விசாய அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது.


ஐக்கிய நாடுகளின் உணவு ஏப்ரல் மாதத்திற்கான முகமையின் உலக விலைக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 2022 உடன் ஒப்பிடுகையில் உலகளவில் உணவு விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
 உணவு மற்றும் விசாய அமைப்பின் (FAO) உணவு விலைக் குறையீடானது உலகளவில் உணவுப் பொருட்களில் விலையை ஆராய்ந்து வெளியிடப்படுகிறது. இது கடந்த மாதம் 127.2 புள்ளிகளாக இருந்துள்ளது. மார்ச் மாதம் இது 126.9 புள்ளிகளாக இருந்தது.


சர்க்கரை, இறைச்சி, அரிசி ஆகியனவற்றின் விலை உயர்வால் சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. 


இது குறித்து எஃப்ஏஓ தலைமைப் பொருளாளர் மேக்சிமோ டொரேரோ கூறுகையில், உலகளவில் பொருளாதார மந்தநிலையில் இருந்து சிறிதளவு மீட்சி ஏற்படுவதால் டிமாண்ட் அதிகமாக உள்ளது. இது மேலிருந்து ஓர் அழுத்தத்தைத் தருவதால் உணவு விலை அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 2011க்குப் பின்னர் சர்க்கரை விலைக் குறியீடு மார்ச் 2023ல் தான் மிகவும் அதிகரித்துள்ளது. 17.6 சதவீதம் ஆக சர்க்கரை விலைக் குறியீடு அதிகரித்துள்ளது.


இறைச்சி விலைக் குறையீடு 1.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. பால் விலைக் குறியீடு 1.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. சமையல் எண்ணெய் விலைக் குறியீடு 1.3 சதவீதமாகவும், பருப்பு விலை குறியீடு 1.7 சதவீதமாகவும் குறைந்துள்ளது. ஆனால் அரிசி விலைக் குறியீடு அதிகரித்துள்ளது.


இது குறித்து டொரேரோ கூறுகையில், அரிசி விலைக் குறியீடு அதிகரிப்பது கவலையளிக்கிறது. பிளாக் ஸீ வழியான வர்த்தம் ரஷ்யா உக்ரைன் போரால் தடைபடுவதும் ஒரு காரணம். இந்தப் பாதையில் அரிசி வர்த்தகம் மீட்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் கூடவே சோளம், கோதுமை விலைக் குறியீடும் அதிகரிக்கும் என்றார்.


சர்வதேச அளவில் கோதுமை உற்பத்தி 2023ல் 785 டன்னாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2022 உற்பத்தியைவிட குறைவு.


அதேபோல் 2023/24ல் அரிசி உற்பத்தி பூமத்திய ரேகைக்கு தெற்கேஉள்ள பிராந்தியங்களில் சீராக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. லா நினா காலநிலை பிரச்சனையும் இதற்குக் காரணமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2022ல் உலகளவில் தானிய உற்பத்தி 2.785 பில்லின் டன்னாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. அது 2021ஐ விட 1.0 சதவீதம் குறைவு.


உலகளவில் 2022/23ல் தானிய பயன்பாடு 2.780 பில்லியன் டன் என்று கணக்கிடப்பட்டது. இதனால் 2022/2023 பருவங்களின் முடிவில் உலக தானியப் பங்குகள் அவற்றின் தொடக்க நிலையிலிருந்து 0.2% குறைந்து 855 மில்லியன் டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.