சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 16 கோடியே 10 லட்சத்து 68 ஆயிரத்து 812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 44 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 88 லட்சத்து 60 ஆயிரத்து 334 ஆக உள்ளது. ஒரு கோடியே 88 லட்சத்து 63 ஆயிரத்து 960 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 288 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் புதிதாக 35 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 826 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 3 கோடியே 35 லட்சத்து 85ஆயிரத்து 740 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 97 ஆயிரத்து 770 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் ஒரே நாளில் 76 ஆயிரத்து 638 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 545 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் ஒரு கோடியே 53 லட்சத்து 61 ஆயிரத்து 686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 28 ஆயிரத்து 256 யை கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்திலும் பிரேசில் 3வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அமெரிக்கா, பிரேசிலில் குறைந்து வருகிறது. இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
உலகளவில் நேற்று கொரோனா தொற்றால் 16 கோடியே 3 லட்சத்து 7 ஆயிரத்து 619 பேர் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 30 ஆயிரத்து 361 ஆக அதிகரித்தது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 80 லட்சத்து 47 ஆயிரத்து 677ஆக இருந்தது.
இந்தியாவில் நேற்று 3 லட்சத்து 48 ஆயிரத்து 421பேருக்கு பேருக்கு கொரோனா நோய்த் தொற்று புதிதாக கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 4 ஆயிரத்து 205 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர்.
பொதுமக்கள் முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.