சீனாவில் நெடுஞ்சாலை அமைக்கப்பதற்காக 10 ஆண்டுகளாக பெண் ஒருவர் வீட்டை காலிசெய்ய மறுத்ததால், அப்பெண்ணின் வீட்டைச் சுற்றிச் சாலை அமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இதனைக்காண்பதற்கு ஏராளமான மக்கள் புதிய சாலை வழியாகப் பயணிக்கின்றனர்.


வீடு என்பது அனைவரின் கனவு. எப்படியாவது வீட்டினைக் கட்டிப்பார்க்க வேண்டும் எனவும் அதில் நிம்மதியாக வாழ வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் எந்தச் சூழலிலும் தன்னுடைய இடத்தினை விட்டு பிடிக்காத மாற்று இடத்திற்கு செல்ல வேண்டும் நினைத்தாலும் மனதளவில்  பாதிப்பினை ஏற்படுத்தும். இதற்காக  எத்தனை கோடிகள் கொடுத்தாலும் அதற்கு ஈடாகாது. அப்படித்தான் சீனாவின் குவாங்சோ பகுதியினைச்சேர்ந்த ஒரு பெண் 10 ஆண்டுகளாக தன்னுடைய வீட்டைச்சுற்றி சாலை அமைப்பதற்காக  தர மறுத்துள்ளார். இதற்காக பொறுத்திருந்திருந்துப் பார்த்த அதிகாரிகள் எடுத்த முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.



சீனாவில் நெடுஞ்சாலையில் அமைக்க, தனியார் நிறுவனத்துடன் அந்நாட்டு அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இதனையடுத்து நெடுஞ்சாலைப் பணியினை விரைவில் முடிக்க வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் உள்ள இடம் மற்றும் வீட்டின் உரிமையாளர்களிடம் பேசி அந்த இடத்தினை வாங்கியதோடு, அதற்குரிய பணத்தினையும் வழங்கி வந்துள்ளது அந்த தனியார் நிறுவனம். மேலும் நிலத்தில் உரிமையாளர்களிடம் ஒப்பந்தமும் நிறைவேற்றிக்கொண்டனர். நெடுஞ்சாலை அமைப்பதற்காக பல இடங்களை அதிகாரிகள் கைப்பற்றி இருந்தப்பொழுதும் அவர்களால் குவாங்சோ என்ற பகுதியில் அமைந்திருக்கும் 40 சதுர மீட்டர் அளவு கொண்ட சிறிய வீட்டினை மட்டும் அவர்களால் வாங்க முயடிவில்லை. 


இந்நிலையில் தான், இந்த சிறிய வீட்டினை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்பதற்காக பல முறை அதிகாரிகள் அந்த வீட்டில் வசிக்கும் லியாங் என்ற பெண்ணிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சிறிதுகூட அப்பெண் ஒத்துழைப்புத் தரவில்லை எனக்கூறப்படுகிறது.  ஒன்றிரண்டு ஆண்டுகள் இல்லை சுமார் கடந்த 10 ஆண்டுகளாக அப்பெண்ணிடம் அதிகாரிகள் பேசி வந்தனர். குறிப்பாக அப்பெண் வசித்த  இடத்துக்காக அதிக விலை கொடுப்பதாகவும், மேலும் இரண்டு பிளாட்டுகள் கூட ஒதுக்கித்தருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் எதற்கும் அப்பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில்  சீன அரசோ அப்பெண்ணின் அனுமதி இல்லாமல் அவர் வசிக்கும் வீட்டினைக் காலி செய்யக்கூடாது என தெரிவித்துவிட்டனர்.



இந்த சூழலில் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்திருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், குவாங்சு பகுதியில் உள்ள அந்தப்பெண்ணின் வீடு இருக்கும் பகுதியில் மட்டும்,  சுற்றிச் செல்லும் படி பாலத்துடன்  சாலையினை கட்டியுள்ளனர். சீனாவில் சமீபத்தில் இந்தச் சாலைக்கு திறப்பு விழா நடைபெற்றதோடு அந்த வீடு இருக்கும் பகுதிக்கு நெயில் ஹவுஸ் எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  சாலைக்கு நடுவே அமைந்துள்ள இந்தச் சிறிய வீட்டினைப்பார்ப்பதற்காக மக்கள் அவ்வழியாக பயணம் செய்கின்றனர். பலரும் ஏன் இந்தப் பெண் இடத்தினைக்  கொடுக்க மறுத்துவிட்டார்? என்பது போன்ற பல கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இதற்குப் பதிலளித்த லியாங் என்ற பெண், தற்பொழுது சுற்றுச்சூழல் பாதிப்பு எனக்கு ஏற்பட்டிருந்தாலும், எனக்குப்பிடித்த வீட்டில் சந்தோஷமாக, சுதந்திரமாக வசித்து வருகிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் கேட்ட இடத்தினை சீன அரசு வழங்க மறுத்துவிட்டதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.