விமானத்தில் கொட்டாவி விடும் போது தாடை ஒரு பக்கமாக மாட்டியதால் விமானத்தையே கதிகலங்கவைத்த 21 வயதான லண்டன் பெண், சொல்லும் அட்வைஸ் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 


21 வயதான இசபெல்லா புருசக், ஜேம்ஸ் மற்றும் அவரது தோழிகளுடன் கடந்த வாரம் லண்டனில் உள்ள லூடன் விமான நிலையத்தில் இருந்து, ஸ்பெயினியில் உள்ள மலாகாவுக்கு ஈஸிஜெட் விமானத்தில் சென்று கொண்டு இருந்தனர்.  விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென இசபெல்லாவுக்கு கொட்டாவி வந்தது. இதனால், இசபெல்லாவுக்கு தனது வாயின் கீழ் தாடை ஒரு பக்கமாக இழுத்துகொண்டது. நீண்ட நேரம் அவர் முயற்சி செய்தும் அவரால் தனது தாடையினை இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. உடனே தன்னுடன் பயணித்துக் கொண்டிருக்கும்  தனது தோழிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவலினை அனுப்பி அவரது உதவியை நாடியுள்ளார். தனது தோழியுடன் நீண்ட நேரம் முயற்சி செய்தும் அவரால் தனது தாடையினை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாத இருவரும், விமானத்தில் உள்ள பணிப்பெண்ணின் உதவியை நாடியுள்ளனர். உடனே விமானத்தின் தனியறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இசபெல்லாவின் வாயிற்க்குள் தனது தோழி ஜேம்ஸ் கைவிட்டு தாடையினை இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார். என்ன நடக்கிறது என்பதை கொஞ்சம் தாமதமாக உணர்ந்த விமானப் பணிப்பெண் உடனே அவருக்கு, இசபெல்லா என்ன சொல்ல முயற்சிக்கிறார் என்பதை அவரது தோழிக்கு சொல்லிக்கொண்டு இருந்துள்ளார்.  பெரும் முயற்சிக்குப் பின்னர் இசபெல்லா தனக்கு ஏற்பட்ட அசொகரியத்தில் இருந்து மீண்டுள்ளார். மேலும் அந்த பணிப்பெண் குறித்து இசபெல்லா ’பணிப்பெண் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கனிவாகவும் இருந்தாள் என கூறியுள்ளார்.  


மேலும் இந்த நிகழ்வு குறித்து இசபெல்லா கூறியதாவது, ’எனக்கு இதுபோல் பத்து முறைக்கு மேல் நடந்துள்ளது. ஆனால் மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கியது இந்த முறை தான். நான் ஆரம்ப காலகடத்தில் கொட்டாவி விடவே மிகவும் அச்சப்படுவேன். தனியாக இருக்கவே மிகவும் பயமாக இருக்கும். அதன் பிறகு எனக்கு பழகிக்கொண்டது. அதேநேரத்தில் இந்தமாதிரி கொட்டாவி விடும் போது மிகவும் சிரமத்திற்கு ஆளானதே இல்லை. நானே எனது தாடையை சரி செய்து கொள்வேன். எனக்கு ஏற்படும் இந்த விநோத நோய் எனக்கு தாடை பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கும் என பலர் சொல்லுகின்றனர்’ என்றார். இந்த நிகழ்வின் ஒட்டுமொத்த வீடியோவையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இச்பெல்லா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை 5.5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலர், நான் இனி வாயைத் திறக்கவே மாட்டேன், உங்களின் நட்பு பாராட்டுக்குரியது, புதிதாக ஒரு பயம் உருவாகிவிட்டது, மிகவும் பயமாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண