விபரீதத்தில் முடிந்த காதல் புரபோஸல்:
முன்பெல்லாம் காதலை சொல்வதற்கு ஒரு கடுதாசி போதுமானதாக இருந்தது. ஆனால் காலம் மாற மாற ஆண்கள் தங்களின் கற்பனைக்கு ஏற்ப பல வகைகளில் நூதன முறையில் காதலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வனவிலங்குகளை காண சஃபாரி அழைத்துச்சென்ற காதலர் , ஒட்டகச்சிவிகங்கிகள் சூழ தனது காதலிக்கு ப்ரப்போஸ் செய்திருக்கிறார். அவர் மண்டியிட்டு மோதரம் போட்டுக்கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்து என்ன நடக்கிறது என பார்த்த ஒட்டகச்சிவிங்கி , தவறுதலாக காதலியை இடித்துவிட்டு சென்றுவிட்டது. அந்த வீடியோவில் அவர் சிரித்துக்கொண்டிருந்தாலும். அதற்கு பின்னால் அவர் வலியில் துடித்திருக்கிறார். தற்போது மருத்துவரை அனுகிய அந்த பெண் " நெக் பேண்ட் " அணிந்திருப்பதாக தனது டிக்டாக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
வைரல் வீடியோ:
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 2.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. சிலர் இந்த வீடியோவை வரவேற்றாலும் சிலர் இது உங்கள் திருமணத்தை நடத்த கூடாது என்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம் என கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இதனை கண்ட அந்த பெண் " நாங்கள் 7 வருடங்களாக ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறோம் . தயவு செய்து ஒட்டகச்சிவிங்கியை ஒட்டகச்சிவிங்கியாவே விடுங்கள் " என தெரிவித்துள்ளார்.
எரிமலை வெடிப்பு : இதேபோல எரிமலை வெடித்து சிதறிய காட்சி ஒன்றும் இணையத்தில் வைராகியுள்ளது. ஜப்பானின் முக்கிய தெற்கு தீவான கியூஷுவில் உள்ள சகுராஜிமா எரிமலை ஞாயிற்றுக்கிழமை இரவு வெடித்து, சாம்பல் மற்றும் பாறைகளை கக்கியது. இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (ஜூலை 24 ) உள்ளூர் நேரப்படி இரவு 8 .05மணிக்கு நிகழ்ந்துள்ளது. எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 300 மீட்டர் தொலைவில் வானில் புகை மண்டலங்கள் சூழ்ந்திந்ததாகவும் ககோஷிமாவின் தெற்கு மாகாணத்தில் 2.5 கிமீ (1.5 மைல்) தொலைவில் பெரிய பாறைகளை வீசியது என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சகுராஜிமா எரிமலை அடிக்கடி வெடிப்பது இயல்பான ஒரு விஷயம்தான். இது ஒரு தீவாக இருந்தது, ஆனால் 1914 இல் வெடித்ததைத் தொடர்ந்து தீபகற்பமாக மாறியது.