கொலம்பியாவில் கடலில் நீந்திக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணி எதிரே வந்த படகின் ப்ரொப்பல்லரில் மோதி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த காணொலி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
கப்பல்கள், படகுகளின் முக்கிய அம்சமாகவும் உந்துவிசையாகவும் விளங்கும் ப்ரொப்பல்லர்கள் மோதி நிகழும் விபத்து மரணங்கள் வெளிநாடுகளில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், கொலம்பியா நாட்டின் காலியைச் சேர்ந்த நவம்பர் 27 ஆம் தேதி நடாலியா ஆண்ட்ரியா (26) எனும் இளம்பெண் அந்நகரின் பிரபல ஒயிட் வாட்டா கடற்கரையில் நீச்சலில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கினார்.
நீச்சல் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராமல் ப்ரொப்பல்லரில் மோதி பிட்டம், கீழ் முதுகு மற்றும் கால்களில் பயங்கர காயங்கள் ஏற்பட்டு துடிதுடித்த நடாலியாவை படகோட்டிகள் மீட்டு அவசர அவசரமாக ம்ருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஜெட் ஸ்கை மூலம் அழைத்துச் செல்லப்பட்ட நடாலியாவுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார்.
கொலம்பியாவின் சான் ஆண்ட்ரேஸில் உள்ள ஒயிட் வாட்டா கடற்கரையில் நிகழ்ந்த இந்தக் கோர விபத்தை நேரில் பார்த்த நபர்கள் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நடாலியா மோதிய படகில் 24 சுற்றுலா பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் இருந்த நிலையில், முன்னதாக அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் முன்னதாக மியாமியில் ஸ்பானிய-வெனிசுலாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர் ஜுவான் கார்லோஸ் எஸ்காட் ரோட்ரிகஸின் மகன் ஜுவான் இதேபோல் உயிரிழந்தார். இந்நிலையில், கடலில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் கப்பல்கள், படகுகளில் மோதி உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
மற்றொரு சம்பவம்
முன்னதாக 5 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை பயணித்து ஆன்லைன் காதலனை காணச் சென்ற பெண் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மெக்சிகோவைச் சேர்ந்த 51 வயது பெண்ணான பிளாங்கா அரேலானோ, முன்னதாக தனது ஆன்லைன் காதலரை நேரில் சந்திப்பதற்காக கிட்டத்தட்ட 3000 கிலோமீட்டர்கள் கடந்து பெரு நாட்டுக்கு பயணித்துள்ளார். இந்நிலையில், உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டு, சிதைந்த நிலையில், அவரது உடல் கடந்த நவம்பர் 9ஆம் தேதி பெருவின் ஹூவாச்சோ கடற்கரையில் மீட்கப்பட்டது.
பெருவைச் சேர்ந்த 37 வயதான ஜுவான் பாப்லோ ஜீசஸ் எனும் நபரை நேரில் சந்திக்காமலேயே பல மாதங்களாக மெக்சிகோவைச் சேர்ந்த பிளாங்கா அரேலானோ காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜூலை மாதம் தனது காதலனை இறுதியாக நேரில் சந்திக்கச் செல்வதாகக் கூறி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் முன்னதாக நவம்பர் 7ஆம் தேதி தனது அத்தை பிளாங்காவிடம் பேசியதாகவும், அவர் தங்களது காதல் உறவு சிறப்பாக சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்ததாக பிளாங்காவின் தங்கை மகள் அவரது தங்கை மகள் அரேலானோ தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு இரண்டு வாரங்களாக பிளாங்காவை உறவினர் எவரும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், தற்போது கொடூரமான முறையில் கொல்லப்பட்ட அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிளாங்கா உடல் உறுப்புகளுக்காக கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும், அவரது காதலரைத் தேடியும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.