Vivek Ramaswamy Elon Musk: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில், தொழிலதிபர் எலான் மஸ்கின் செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
விவேக் ராமசுவாமி விலகல்:
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே, இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசுவாமி, அரசாங்கத் திறன் துறையின் (DOGE) ஒரு பகுதியாக இருக்கமாட்டார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கோடீஸ்வரர் எலோன் மஸ்க்குடன் இணைந்து, திறன் துறையை வழிநடத்த விவேக் ராமசுவாமி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அரசாங்க செயல்திறன் ஆலோசனைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ DOGE அமைப்பை உருவாக்குக்வதில் விவேக் ராமசுவாமி முக்கிய பங்காற்றினார். விரைவில் அவர் மக்கள் பிரதிநிதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறார். அதற்காக நாங்கள் அறிவித்த DOGE கட்டமைப்பில் இருந்து வெளியே இருக்க வேண்டி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அவருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்கா மீண்டும் சிறந்து விளங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேயர் பதவிக்கு போட்டியிடும் விவேக் ராமசுவாமி:
குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற 39 வயதான விவேக் ராமசுவாமி, ஓஹியோ ஆளுநர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தனது திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “DOGE-ஐ உருவாக்குவதற்கு உதவியது எனக்கு கிடைத்த மரியாதை. அரசாங்கத்தை சீரமைப்பதில் எலான்ன் & குழு வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன். ஓஹியோவில் எனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி நான் மிக விரைவில் கூறுவேன். மிக முக்கியமாக, நாங்கள் அனைவரும் -அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க அதிபர் ட்ரம்ப் உதவ வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததன் காரணமாகவே, விவேக் ராமசுவாமி அந்த பதவியில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.
எலான் மஸ்கின் சல்யூட்:
அரசாங்க அமைப்பிலிருந்து விவேக் ராமசுவாமி விலகியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ட்ரம்ப் நடத்திய பேரணியில் எலான் மஸ்க் செய்த செயலும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி நிகழ்ச்சியில் பேசிய அவர், ”இது சாதாரண வெற்றியல்ல. இது மனித நாகரிகத்தின் பாதையில் ஒரு முட்கரண்டி” என குறிப்பிட்டார். தொடர்ந்து பொதுமக்களை நோக்கி வித்தியாசமான முறையில் கையை ஆவேசமாக நீட்டினார். அதை நாஜி வணக்கத்துடன் இணையவாசிகள் ஒப்பிட்டு, வைரலாக்கி வருகின்றனர்.
ஜெர்மனியில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் குடியேற்ற எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்புக் கட்சியான ஜெர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்று (AfD) க்கு மஸ்க் ஆதரவு அளித்ததன் விளைவாக அவருக்கு எதிராக இந்த வீடியோ ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.